டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

குறைந்த படங்களிலேயே நடித்திருந்தாலும் மிகக்குறுகிய காலகட்டத்தில் தென்னிந்திய அளவில் விஜய், மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் ஆகியோருக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு முன்னணி கதாநாயகியாக வளர்ந்து விட்டார் ராஷ்மிகா மந்தனா. குறிப்பாக கடந்த வருட இறுதியில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்ற சாமி சாமி பாடலுக்கு அவர் ஆடிய நடனம் அவரை தென்னிந்தியாவை தாண்டி வட மாநிலத்திலும் கொண்டு சேர்த்திருக்கிறது. அதன் பலனாக தற்போது அமிதாப்பச்சன் உடன் இணைந்து குட்பை என்கிற படத்தில் நடித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.
இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் மும்பையில் இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்துகொண்டு வருகிறார் ராஷ்மிகா. அப்படி அவர் செல்லும் இடங்களில் எல்லாம் சாமி சாமி பாடலுக்கு அவரை நடனம் ஆட சொல்லி கேட்காதவர்கள் பாக்கி இல்லை. அந்த வகையில் பாலிவுட் சேனல் ஒன்றில் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்ட ராஷ்மிகா அந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் கோவிந்தாவுடன் சேர்ந்து சில நொடிகள் சாமி சாமி பாடலுக்கு நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தார். இந்த பாடலுக்கு ஆடுவதற்காக என்றோ என்னவோ அவர் பாவாடை தாவணி போன்ற ஒரு மாடன் உடையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.