கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் |
ஹிந்தியில் சீனிகம், பா, ஷமிதாப் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் பால்கி. தற்போது துல்கர் சல்மானை வைத்து ஹிந்தியில் 'சுப்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். பாலிவுட் நடிகர் சன்னி தியோல் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ரிவெஞ்ச் ஆர்டிஸ்ட் என்கிற டேக்லைனுடன் சைக்காலஜிக்கல் திரில்லர் ஆக இந்தப் படம் உருவாகி வருகிறது. இது துல்கர் சல்மான் ஹிந்தியில் நடிக்கும் அவரது மூன்றாவது படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு பெருமளவு முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க துல்கர் சல்மானை ஏன் தேர்வு செய்தேன் என்பது குறித்து கூறியுள்ளார் பால்கி.
இதுபற்றி அவர் கூறும்போது, “இந்த நாட்டில் பாதிப்பேருக்கு தெரிந்த சிறந்த திறமையான நபராக, ஒரு சூப்பர்ஸ்டார் முகமாக இருக்க வேண்டும். அதேபோன்று இன்னும் நாட்டில் இருக்கும் பாதிப்பேருக்கு ஒரு புதிய கண்டுபிடிப்பாக தெரிய வேண்டும். அதே சமயம் தனது தாய் மொழியைப் போலவே ஹிந்தியில் நன்கு பேச தெரிந்தவராக இருக்க வேண்டும். கிட்டத்தட்ட ஹிந்தி சினிமாவுக்கு ஒரு புதுமுகம் ஆகவே இருக்க வேண்டும். இதற்கெல்லாம் துல்கர் சல்மான் தான் சரியாக பொருந்தி வந்தார். கொரோனா காலகட்டத்தில் அவரிடம் ஜூம் கால் வழியாகத்தான் பேசினேன். ஆனால் அவர் முழு கதையையும் கேட்கவே இல்லை. உடனே இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்” என்று கூறியுள்ளார்.