''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
கடந்த 2020ம் ஆண்டு பழம்பெரும் பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது பாலிவுட் குணசித்ர நடிகர் கமல் ரஷீத் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் "ரிஷி கபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இறந்துவிடக் கூடாது. ஒயின் ஷாப்கள் விரைவில் திறக்கப்படவிருக்கின்றன" என்று குறிப்பிட்டிருந்தார். ரிஷிகபூர் குடிப்பழக்கம் உள்ளவர் என்பதை கிண்டல் செய்வதுபோல அந்த பதிவு இருந்தது. அதேபோல் இர்ஃபான் கான் பற்றியும் அவர் சர்ச்சைக் கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். இருவருமே அடுத்தடுத்து மரணம் அடைந்தார்கள்.
இரு கலைஞர்களையும் அவர்களின் மறைவை ஒட்டி தரக்குறைவாக விமர்சித்ததாக யுவ சேனா அமைப்பினர் கமால் ரஷீத்கான் மீது போலீசில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் கமால் ரஷீத் கான் வெளிநாடுக்கு தப்பி சென்றுவிட்டடார். அவர் எங்கிருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை அவர் மும்பை திரும்புவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் அவரை விமானநிலையத்தில் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் இன்று அவரை மும்பை போரிவல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார்கள்.