'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
டில்லியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மனைவியை மிரட்டி ரூ. 215 கோடி பணம் பறித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை அமலாக்க பிரிவு அதிகாரிகள் கடந்த ஆண்டில் கைது செய்தனர். அவரிடத்தில் நடத்திய விசாரணையில் தொழிலதிபரின் மனைவியை மிரட்டி பறித்த பணத்தைக் கொண்டு தான் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாகவும், பாலிவுட் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக, இலங்கையை சேர்ந்த பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டசுடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்திருக்கிறார் சுகேஷ். அப்போது அவருக்கு கோடிக்கணக்கில் பரிசுகளையும் அவர் வழங்கியிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. அதன்பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது சுகேஷிடம் தான் பெற்ற பரிசுகள் குறித்த தகவல்களை தெரிவித்தார். அதையடுத்து ஜாக்குலினுக்கு சொந்தமான 7.27 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் கடந்த ஏப்ரல் மாதம் முடக்கப்பட்டது.
இந்தநிலையில் அந்த வழக்கு தொடர்பான குற்ற பத்திரிக்கையை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று தாக்கல் செய்துள்ளார்கள். அதில், சுகேஷ் மட்டுமின்றி தொழில் அதிபரின் மனைவியை மிரட்டி பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸும் குற்றவாளியாக முடிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளார்.