சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் | கதை நாயகன் ஆன இயக்குனர் ஜெகன் | கராத்தே ஹுசைனிக்கு தமிழக அரசு 5 லட்சம் உதவி | பிளாஷ்பேக்: மோசமான தோல்வியை சந்தித்த ரஜினி படம் | பிளாஷ்பேக் : கிருஷ்ணராக நடித்த நடிகை |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் பிபாஷா பாசு. கிளாமர், கவர்ச்சி என ரசிகர்களைக் கவர்ந்தவர். 2001ம் ஆண்டு வெளிவந்த 'அஜனபி' படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானவர். அதன் பிறகு கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக பல ஹிந்திப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் நடித்த 'சச்சின்' படத்திலும் ஒரு முக்கிய கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்தார். 'டேய் டேய் கட்டிக்கோடா' என்ற பாடலுக்கு நடனமாடியவர். பெங்காலி மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கையில் சில பல காதல்களைச் சந்தித்தவர். ஆனால், 2016ம் ஆண்டு கரண் சிங் குரோவர் என்ற நடிகரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி ஆறு வருடங்களுக்குப் பிறகு தனது 43வது வயதில் கர்ப்பம் அடைந்துள்ளார் பிபாஷா பாசு. அது குறித்து நேற்று இன்ஸ்டாகிராமில் அரை குறையாக அணிந்த மேலாடை ஒன்றை மட்டும் அணிந்து கர்ப்பம் தரித்த வயிறு தெரிய கணவருடன் சேர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு தனது தாய்மை குறித்து அறிவித்துள்ளார். பிபாஷாவுக்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.