'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் | 'கைதி 2' எப்போது ஆரம்பமாகும் ? | நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? |

ஹிந்தித் திரையுலகத்தின் முக்கியமான ஹீரோக்களில் முதன்மையானவர் ஆமீர்கான். அவர் நடித்து வெளிவரும் படங்கள் எப்போதுமே வித்தியாசமான படங்களாக இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை பாலிவுட் ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால், அவருடைய கடைசி இரண்டு படங்கள் பெரும் தோல்வியைச் சந்தித்து அந்த நம்பிக்கையை குலைத்துவிட்டது.
ஆமீர்கான் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'லால் சிங் சத்தா' படம் பாக்ஸ் ஆபீசில் தோல்வியைத் தழுவியுள்ளது. படத்திற்கு எதிர்பார்த்த வசூல் இல்லை என்பது உண்மை. படம் வெளியாகி ஐந்து நாட்கள் ஆன பின்னும் வசூலில் 50 கோடியைத் தாண்டவில்லை. ஆமீர்கான் நடித்து நான்கு வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்' படமும் தோல்வியைத் தழுவியது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
பட வெளியீட்டிற்கு முன்பாக முக்கிய ஊர்களுக்குச் சென்று படத்திற்கு புரமோஷன் செய்தார் ஆமீர்கான். ஆனால், பட வெளியீட்டிற்குப் பின் கிடைத்த மோசமான வரவேற்பால் அவர் தற்போது தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டாராம். மும்பை மீடியாவைச் சேர்ந்தவர்கள் அவரைத் தொடர்பு கொண்டால் தொலைபேசியை எடுப்பதில்லையாம்.
அதே சமயம் படத்தின் மூலம் எந்த நஷ்டமும் இல்லை என படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படத்திற்காக ஆமீர்கான் எந்த சம்பளமும் வாங்கவில்லை என்கிறார்கள். எந்த நஷ்டம் வந்தாலும் அதில் பங்கெடுப்பேன் என அவர் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார் என்றும் தகவல்.