நெல்சன் தயாரிப்பில் கவின் | விஜய் 68வது படத்தின் பூஜை குறித்து தகவல் இதோ | ஒரே ஆண்டில் இரண்டு ஆயிரம் கோடி படம் தந்த ஷாரூக்கான் | இப்படி ஒரு அண்ணன் இருக்கும் போது எல்லாமே எனக்கு ஜெயம் தான் : ஜெயம் ரவி | தமிழுக்கு வரும் அடுத்த மலையாள நடிகை நிமிஷா சஜயன் | அஜித்துடன் நடிக்கிறாரா தீபக்? - வைரலாகும் புகைப்படங்கள் | கிழக்கு வாசல் சீரியல் நேரம் மாற்றம் | டபுள் ஐ ஸ்மார்ட் ஷங்கர் படத்தில் டபுள் ஹீரோயின் | இசையில் இணையும் தந்தை, மகள் | சமூக நீதியும், சமூக பார்வையும் கொண்ட படமே ‛தீ இவன்' |
இந்தியாவில் அதிகமாக வருமான வரி செலுத்துகிறவர்கள் நடிகர், நடிகைகள் தான். காரணம் மற்றவர்கள் தங்கள் தொழில் சார்ந்து வரி செலுத்துவார்கள். ஆனால் நடிகர், நடிகைகள் மட்டும் நேரடியாக சம்பளம் பெறுகிறவர்கள். இதனால் அவர்கள் தான் அதிகமான வருமானவரி கட்டுவார்கள்.
தமிழ்நாட்டில் அதிகமான வருமானவரி செலுத்தியவர் ரஜினிகாந்த். இதற்கான விருதை அவருக்கு வருமானவரித்துறை வழங்கியது. இதனை ரஜினியின் மகள் சவுந்தர்யா பெற்றுக் கொண்டார். இதேபோன்று பாலிவுட்டில் அதிக வருமானவரி செலுத்தியவர் அக்ஷய்குமார். அவருக்கும் இதேபோன்று சான்றிதழை வருமான வரித்துறை வழங்கி உள்ளது. தற்போது அக்ஷய்குமார் லண்டனில் படப்பிடிப்பில் இருப்பதால் அவரது சார்பாக அவரது செயலாளர் பெற்றுக் கொண்டார். அக்ஷய்குமார் தொடர்ந்து 6வது முறையாக இந்த சான்றிதழை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.