சாமியாரான பாலிவுட் நடிகை | இணை நாயகனான யோகி பாபு | தமிழில் வெளியாகும் 'சத்தா பச்சா' | கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு: 9 விருதுகளை அள்ளிய 'மஞ்சும்மல் பாய்ஸ்' | தெலுங்கில் படம் தயாரிக்கும் சமந்தா : தமிழை புறக்கணிப்பது ஏன் | பிளாஷ்பேக்: பெயரை மாற்றிக் கொண்டு தமிழுக்கு வந்த கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: திரைப்படமான சாண்டில்யன் கதை | மீண்டும் அதே வன்முறை, ரத்தம் : லோகோஷ் கனகராஜ், அருண்மாதேஸ்வரன் மாறவே மாட்டார்களா? | கமல்ஹாசன் 71வது பிறந்தநாள் கொண்டாட்டம் இருக்குதா? இல்லையா? | விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு |

படங்கள் வெற்றி பெறும்போது கொண்டாடுவதும், தோல்வி அடையும்போது விமர்சிப்பதும் சினிமாவில் சர்வசாதாரணம். குயின், மணிகர்னிகா படத்தில் தேசிய விருது பெற்றபோது கொண்டாடப்பட்ட கங்கனா ரணவத் தற்போது தக்காட் படத்தின் தோல்வியால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார், கிண்டல் செய்யப்படுகிறார்.
படத்தை பற்றியோ, படத்தில் கங்கனாவின் நடிப்பு பற்றியோ வரும் விமர்சனங்களை விட அவருக்கு வாய்கொழுப்பு, பாரதிய ஜனதா கட்சியின் ஊதுகுழல், அவருக்கு நல்லா வேண்டும் என்பது மாதிரியான விமர்சனங்களே அதிகம் வருகிறது. இத்தனைக்கும் தக்காட் மோசமான படம் அல்ல. ஹாலிவுட் பாணியிலான ஒரு ஆக்ஷன் மூவி. இந்த தோல்வி திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து கங்கனா கூறியிருப்பதாவது:  தக்காட் படம் பற்றி நிறைய எதிர்மறை கருத்துகள், விமர்சனங்கள் வருகிறது, இது எனக்கு கவலையளிக்கிறது. அதே நேரத்தில் ஜான்சி ராணியின் கதையான மணிகர்னிகா படத்தை நான் தான் இயக்கி நடித்தேன். அந்த படம் பெரும் வசூல் சாதனை படைத்தது. அப்போது யாரும் அதை இந்த அளவிற்கு பாராட்ட வில்லை.
இந்த ஆண்டில் என் மீது எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தாலும் இதே ஆண்டில்தான் லாக்அப் என்ற வெற்றிகரமான டிவி நிகழ்ச்சியை நடத்தி காட்டியிருக்கிறேன் என்பதை மறந்து விட்டார்கள். இந்த வருடம் இத்துடன் முடிந்துவிடவில்லை. இன்னும் 6 மாதங்கள் பாக்கி உள்ளன. மீண்டும் ஒரு வெற்றியுடன் இந்த ஆண்டில் எனது முத்திரையை பதிப்பேன். 
இவ்வாறு  கங்கனா கூறினார்.