300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
ஹிந்தித் திரையுலகில் இந்த ஆண்டில் வெளியான டப்பிங் படங்களான 'ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' இரண்டு படங்களுமே அங்கு 300 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை புரிந்தது. நேரடி ஹிந்திப் படங்களைக் காட்டிலும் இந்தப் படங்கள் அதிக வசூலைப் பெற்றது.
இந்நிலையில் நேற்று வெளியான ஹிந்திப் படங்களான 'ரன்வே 34, ஹீரோபன்ட்டி 2' ஆகிய படங்கள் முதல் நாள் வசூலில் திண்டாடி உள்ளன. அஜய் தேவ்கன் இயக்கத்தில் அமிதாப், அஜய் தேவ்கன், ரகுல் ப்ரீத் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படம் முதல் நாளில் 3 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாம்.
அகமது கான் இயக்கத்தில், டைகர் ஷராப், நவாசுதீன் சித்திக், தாரா சுடாரியா மற்றும் பலர் நடித்த 'ஹீரோபன்ட்டி 2' படம் 8 கோடி வசூலை வசூலித்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், நேற்று மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்த 'கேஜிஎப் 2' படம் ஹிந்தியில் மட்டும் 4 கோடி வசூலித்துள்ளதாம்.
சமீபத்தில் ஹிந்திதான் தேசிய மொழி என்று பேசி சர்ச்சையில் சிக்கினார் அஜய் தேவகன். 'ஹீரோபன்ட்டி 2' பட நடிகரான நவாசுதீன் சித்திக் தான் தென்னிந்தியப் படங்களைப் பார்ப்பதில்லை என்று புதிய சர்ச்சையை ஏற்படுத்தினார். ஆனால், இவர்களிருவரின் படங்களும் முதல் நாளிலேயே குறிப்பிடத்தக்க வசூலைப் பெறவில்லை என்பது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.