'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
ஹிந்தியில் சர்க்கஸ், பைட்டர், பதான் மற்றும் தெலுங்கில் ப்ராஜெக்ட் கே என பல படங்களில் நடித்து வருகிறார் தீபிகா படுகோனே. அதோடு ஹாலிவுட் படங்களிலும் அவர் நடி த்திருப்பதால் உலக அளவில் பிரபலம் ஆகிவிட்டார். இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் எட்டு நடுவர் குழு உறுப்பினர்களில் தீபிகா படுகோனேவும் ஒருவராக இடம் பிடித்துள்ளார். கேன்ஸ் 2022 ஜூரிக்கு பிரெஞ்சு நடிகர் வின்சென்ட் லிண்டன் தலைமை தாங்குவார். இவர்கள் தவிர மேலும் 7 பிரபலங்கள் நடுவர்களாக இணைந்துள்ளனர். மே 17 முதல் 28 வரை இந்த பட விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஜூரி உறுப்பினராக இருந்த முதல் இந்திய நடிகை ஐஸ்வர்யா ராய். தற்போது இந்தப் பெருமை தீபிகா படுகோனேவுக்கும் கிடைத்துள்ளது.