சாய் பல்லவியின் ‛ஏக் தீன்' ஹிந்தி படம் டீசருடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு | சிறிய படங்களை கண்டு கொள்ளாத ஓடிடி நிறுவனங்கள் : வசந்தபாலன் காட்டம் | பாலிவுட்டில் பரவும் தனுஷ், மிருணாள் தாகூர் திருமணத் தகவல் | கமலை சந்தித்து ஆசி வாங்கிய ஊர்வசியின் மகள் | திரிஷ்யம் 3 படத்துடன் மோதும் வாழ 2 | மரகத நாணயம் 2 படத்தில் பிரியா பவானி சங்கர் | விஜய் படம் எப்ப ரிலீஸ் : அஜித் படம் அறிவிப்பு எப்ப வரும் | தலைப்பு ‛தி மம்மி ரிட்டர்ன்ஸ்' : ஆனா பேய் படமில்லையாம் | விஜய் சேதுபதி கைவசம் வரிசை கட்டும் படங்கள் | பொங்கல் படங்களில் வின்னர் எது? : 100கோடியை தாண்டுமா பராசக்தி |

நடிகர் ஷாரூக்கான், தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது ரெட் சில்லீஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கப்பட்ட நிலையில், ஷாரூக்கானின் மகன் ஆர்யன்கான் போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனால், இப்படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. ஆர்யன் கான் ஜாமினில் வெளியில் வந்தவுடன் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியது. இந்தப் படத்தில் ஷாரூக்கானுக்கு நாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
இப்படத்திற்கு அடுத்ததாக சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன் உள்ளிட்டோருடன் பதான் என்ற படத்தில் நடிக்கிறார். இதனையும் முடித்துவிட்டு ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஒரு படத்தில் ஷாரூக்கான் நடிக்கவுள்ளார். இப்படத்தில் விக்கி கவுஷன், டாப்ஸி, பொமான் ஹிரானி உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ராஜ்குமார் ஹிரானி இந்தியில் 'முன்னாபாய் எம்பிபிஎஸ்', '3 இடியட்ஸ்', 'பிகே' உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.