'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் |
ராஜமவுலி இயக்கியுள்ள ஆர்ஆர்ஆர் படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் ஆலியா பட். இவர் ஹிந்தியில் தயாராகியுள்ள கங்குபாய் கத்தியவாடி என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள இந்த படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி உள்ளது. பாலியல் தொழிலாளி ஒருவர் அரசியலுக்கு வரும் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் பாலியல் தொழிலாளியாகவும், அரசியல்வாதியாகவும் நடித்திருக்கிறார் ஆலியா பட்.
இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு மும்பையில் உள்ள ரெட் லைட் ஏரியாவிற்கு சென்ற ஆலியா பட், அங்குள்ள பாலியல் தொழிலாளிகளுடன் பேசி, பழகி அவர்களது நடை, உடை, பாவனைகளை உள்வாங்கி அதை இந்த படத்தில் பிரதிபலித்திருக்கிறார். இப்படம் வருகிற பிப்ரவரி 25ஆம் தேதி திரைக்கு வருகிறது.