பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

ஹிந்தியில் அத்வைத் சந்தர் இயக்கத்தில் அமீர்கான் தயாரித்து நடித்து வரும் படம் லால் சிங் சட்டா. இப்டம் 1994ம் ஆண்டு வெளியாகி ஆஸ்கர் விருதுகளைக் குவித்த பாரஸ்ட் கம் என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இந்த படத்தில் அமீர்கானின் நண்பராக தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடித்து வருகிறார். இவர்களுடன் கரீனாகபூர், மோனா சிங் ஆகியோரும் நடிக்கும் இப்படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக இருப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார் அமீர்கான்.
அதோடு ஏப்ரல் 14ஆம் தேதி கன்னட நடிகர் யஷ்ஷின் கேஜிஎப்- 2 படமும் வெளியாவதால் அவரிடத்தில் மன்னிப்பு கேட்டு அமீர்கான் ஒரு செய்தி வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த லால் சிங் சட்டா படம் ஏற்கனவே இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு கொரோனா தொற்று காரணமாக அதை மாற்றிக் கொண்டே வந்த அமீர்கான் தற்போது ஏப்ரல் 14ம் தேதி கண்டிப்பாக ரிலீஸ் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.