'விக்ரம் 3'க்கும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குநர்: கமல் | பியூட்டி கம்மிங் ஒத்து : ரம்யா கவுடாக்கு ஆர்மி ரெடி | தேவதை போல் ஜொலிக்கும் ஸ்ருதிராஜ் | விக்னேஷ் சிவனுக்கு அஜித் போட்ட உத்தரவு | ‛வீரன்'-ஆக களமிறங்கிய ஆதி | தனுஷ் பிறந்தநாளில் திரைக்கு வரும் திருச்சிற்றம்பலம் | 12 நாட்களில் 100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் டான் | விஜய்யின் 68வது படத்தை இயக்கும் அட்லி | கஞ்சா பூ கண்ணாலே பாடல் லிரிக் வீடியோ வெளியீடு | ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கவுதம் கார்த்திக் நடிக்கும் ‛1947 ஆகஸ்ட் 16' |
ஹிந்தியில் அமீர்கான் தயாரித்து நடித்துள்ள படம் லால் சிங் சத்தா. அத்வைத் சந்தன் என்பவர் இயக்கியுள்ள இந்த படம் ராணுவ வீரர்கள் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகி இருக்கிறது. இப்படம் மூலம் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா ஹிந்தியில் அறிமுகமாகிறார்.
இந்த படத்தின் ரிலீஸ் தேதி கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு வெளியாகும் என்று தெரிவித்திருந்த அமீர்கான் பின்னர் ரிலீஸ் தேதியை 2022 பிப்ரவரி காதலர் தினத்தன்று வெளியாகப் போவதாக தெரிவித்திருந்தார். ஆனால் அதையடுத்து இறுதிகட்ட பணிகள் முடிவடையவில்லை என்று சொல்லி மீண்டும் வெளியீட்டு தேதியை மாற்றப் போவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது ஏப்ரல் 14ம் தேதி அமீர்கானின் லால்சிங் தத்தா படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேநாளில் கன்னடத்தில் யாஸ் நடித்துள்ள கேஜிஎப் -2 படமும் வெளியாகிறது. இந்தப் படங்களும் இரண்டு மெகா படங்களும் ஒரே நாளில் வெளியானால் வசூல் பாதிக்கும் என்று கருத்துக்கள் இருந்தபோதும் எனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று அமீர்கான் அறிவித்திருக்கிறார்.