கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
சொகுசு கப்பலில் போதை விருந்தில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேர் அதிரடி சோதனையில் பிடிபட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிறையில் இருக்கும் ஆர்யன் கான் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவர் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுளார்.
சிறையில் இருக்கும் மகனின் கை செலவுக்காக ஷாருக்கான் 4500 ரூபாய் மணியார்டர் அனுப்பி உள்ளார். சிறை விதிமுறைகள் 5 ஆயிரத்துக்கும் குறைவான தொகையை மட்டும் அனுமதிக்கும் என்பதால் இந்த தொகையை அனுப்பி உள்ளார். இந்த தகவலை சிறை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த பணத்தை வைத்து அவர் சிறை கேண்டீனில் உணவு பொருள் வாங்கி சாப்பிடலாம், துணிகளை சலவை செய்ய கொடுக்கலாம். சிகை அலங்காரம் செய்து கொள்ளலாம்.