ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை | துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன் | எண்பதுகளின் கதாநாயகியை நினைவூட்டும் அனுபமா; நடிகை கோமலி பிரசாத் பாராட்டு | 'லோகா 2' மற்றும் 'பிரேமலு 2'வில் நான் இருக்கிறேனா ? மமிதா பைஜூ பதில் |
மலையாள சினிமாவில் பாலியல் ரீதியான துன்புறுத்தல் தாண்டி போதை கலாச்சாரமும் அதிகாகி உள்ளது என கடந்தாண்டு வெளியான ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. போதை விவகாரத்தில் நடிகர்கள் ஷைன் டாம் சாக்கோ மற்றும் ஸ்ரீநாத் பாஷி ஆகியோரின் பெயர்களும் அடிபட்டன. இவர்களில் ஷைன் டாம் சாக்கோ தமிழில் விஜய்யின் பீஸ்ட், சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி உள்ள குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்துள்ளார்
இந்நிலையில் விக்ருதி, ஜன கன மன உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்த நடிகை வின்சி அலோசியஸ், நடிகர் பெயரை குறிப்பிடாமல் “நான் ஒரு படத்தில் பணியாற்றியபோது அதில் நடித்த ஒரு நடிகர் போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தார். என் ஆடையை சரி செய்ய கேரவன் சென்றபோது நான் வந்து உதவி செய்கிறேன் என என்னுடன் வர முற்பட்டார். இன்னொரு நாள் ஒரு பாடல் காட்சிக்கான ரிகர்சலின் போது திடீரென அவரது உதட்டில் இருந்து வெள்ளையான நிறம் கொண்ட பொருள் வெளிப்பட்டது. அப்போதே எனக்கு அவர் போதை பொருள் பயன்படுத்தி இருக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது'' என தெரிவித்திருந்தார்.
தற்போது மலையாள நடிகர் சங்மான அம்மாவில் போதைப் பொருளை பயன்படுத்தி விட்டு, தன்னிடம் அத்துமீறியதாக ஷைன் டாம் சாக்கோ பெயரை குறிப்பிட்டு வின்சி அலோசியஸ் புகார் அளித்துள்ளார். இதுபற்றி விசாரிக்க அன்சிபா ஹாசன், வினு மோகன் மற்றம் சாராயு மோகன் ஆகிய 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கபட்டுள்ளது. ஷைன் டாம் சாக்கோ மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் மீது நடவடிக்கை பாயும் என தெரிகிறது.
சாக்கோ இதற்கு முன்பு ஆலப்புழா போதைப்பொருள் விவகாரத்திலும் சம்பந்தப்பட்டிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.