Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2018 - திரை நட்சத்திரங்களின் புத்தாண்டு சபதங்கள்

01 ஜன, 2018 - 12:13 IST
எழுத்தின் அளவு:
Celebrities-new-year-Resolution-on-2018

கடந்து செல்லும் ஒவ்வொரு ஆண்டும் எல்லோருக்கும் ஒரு வித பாடம். இதில் எவ்வளவோ நல்ல விஷயங்கள், சந்தோஷங்கள், துக்கங்கள், சண்டை சச்சரவுகள் எல்லாம் கடந்து சென்றிருக்கும். அதேப்போல் பிறக்கும் ஒவ்வொரு ஆண்டும் எல்லோருக்கும் சிறப்பான ஆண்டாகவே இருக்க வேண்டும் என எண்ணுகிறார்கள். அதேப்போல் அன்றைய தினத்தில் ஏதாவது ஒரு புதிய கொள்கையை வகுத்து கொள்வதும் உண்டு. இதை எவ்வளவு பேர் கடைசி வரை காப்பாற்றுகிறார்கள் என்று தெரியாது. ஆனாலும் ஒவ்வொரும் ஆண்டும் ஏதாவது ஒரு வகையாகன ஒரு கொள்கைகளை வகுத்து கொள்கிறோம். அப்படி 2018-ம் ஆண்டில் திரை நட்சத்திரங்கள் தாங்கள் என்ன மாதிரியான கொள்கைகள், சபதங்கள் மேற்கொண்டுள்ளனர் என்பதை இங்கு பார்ப்போம்...

சதுரன் வர்ஷா
இந்த ஆண்டு முதல் நானும் என் நட்பு வட்டாரங்களும் சேர்ந்து மூன்றாம் பாலினத்தவர்கள் பற்றியும், அவர்களது உரிமைகள் பற்றியும் அவர்களின் எதிர்காலம் குறித்தும் மக்களிடம் எடுத்து செல்லும் முயற்சியில் இறங்க திட்டமிட்டு உள்ளோம்

ஆர்த்தி கணேஷ்
இந்த ஆண்டு முதல் தேதி முதல் சரியான உடற்பயிற்சி மற்றும் உடலை முறைப்படி உணவு கட்டுப்பாட்டுடன் வைத்து கொள்ள ஆர்வம் கொண்டுள்ளேன்.

ஜனனி ஐயர்
எனக்கு புத்தாண்டு சபதங்கள் மீதெல்லாம் நம்பிக்கை இல்லை. அதனால் நான் எதையும் எடுத்துகொள்வதில்லை. மனதில் எது நல்ல செயல் என்று படுகிறதோ அதை செய்கிறேன்.

பார்வதி நாயர்
நான் வரும் காலங்களில் மிகுந்த மன பக்குவம் உடையவளாக இருக்க விரும்புகிறேன். இங்கே போட்டி, எதிரி, தோல்வி என்று எதுமே என்னை பாதிக்கவில்லை. வெற்றி, தோல்வி எது வந்தாலும் அதை எடுத்து கொள்ளும் மன பக்குவத்தில் என்னை வளர்த்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

சாக்ஷி அகர்வால்
வரும் ஆண்டு முதல் உலகம் முழுவதும் சுற்றி பார்க்க விரும்புகிறேன். இந்தியா தாண்டி சுற்றி இருக்கும் வரலாற்று இடங்களையும், பண்பாடு கலாசாரம் மிகுந்த இடங்களையும் சுற்றி பார்க்க விரும்புகிறேன்.

ஆரவ்
கடவுளின் அருளால் இந்த ஆண்டு எனக்கு சிறப்பான வருடமாக அமைந்தது. புத்தாண்டு சபதங்கள் மீது பெரிதாக எனக்கு நம்பிக்கை இல்லை. ஒவ்வொரு நாளும் எனக்கு புதிய தொடக்கமாகவே அமைகிறது. நிறைய மாற்றங்களுக்காக வரும் வருடத்தை ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறேன்.

நந்திதா
இந்த ஆண்டு மிகவும் யோசித்து கொண்டே இருக்காமல் மனதுக்கு சரி என்று பட்டால் உடனே ஒத்துக்கொள்ளும் என்ற எண்ணம் இருக்கிறது. புது ஆண்டில் என் நடிப்பில் ஐந்து படங்கள் வெளி வர உள்ளது. ஷூட்டிங் இல்லாத நாட்களில் காலையில் சீக்கிரம் எழுந்து உடற்பயிற்சி மற்றும் சுறுசுறுப்பாக இருக்கும் நிலையை அமைத்து கொள்ள விரும்புகிறேன். சென்ற ஆண்டு எதை எல்லாம் தவற விட்டேன் என்று நினைக்கிறேனோ அதை எல்லாம் இந்த புது ஆண்டில் வேகமாக செயல் பட விரும்புகிறேன்.

அனுமோல்
நிறைய படங்களில் இந்த ஆண்டு நடிக்க வேண்டும், பாசிட்டிவ் எண்ணங்களை வளர்த்து கொள்ள வேண்டும். முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். ,வாழ்க்கையில் எது நடந்தாலும் அதை சந்திக்கும் மன பக்குவம் வேண்டும்.

சுஜா வருணி
என் விஷயத்தில் யார் எதை சொன்னாலும், செய்தாலும் எளிதில் நம்பி விடுவேன். வரும் ஆண்டில் இன்னும் சிறப்பானதாக்கி கொள்ள வேண்டுமானால், இந்த மாதிரி விஷயங்களை பின்பற்ற கூடாது. வேறு எதையும் யாரையும் நான் நம்பாமல் என் கடின உழைப்பை மட்டும் நம்பி செயல் பட போகிறேன். எனக்கு வரும் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. முடிந்த வரை அடுத்தவர்களுக்கு உதவியாக இருக்க விரும்புகிறேன். இந்த புத்தாண்டு எனக்கு மிக சிறப்பாக அமையும் என விரும்புகிறேன்.

நட்டி
எந்த சபதங்கள் எடுத்தாலும் அதை நிறைவேற்ற முடியாமல் போகும். அதனால் நல்ல மக்களுடன் நட்புடன் பழக விரும்புறேன். சாதி, மதம், இனம் கடந்து அரசியல் செய்யாத நட்பு இங்கு தேவை. ஒவ்வொரு மக்கள் மீதும் அன்பு செலுத்த ஆசைபடுகிறேன்.

ஆத்மா (நானும் ரௌடி தான்)
மக்களிடத்தில், குடும்பங்களுக்குள் ஒற்றுமை, சேர்ந்து வாழ்தல் அவசியம் என்பதை புரிய வைக்க விரும்புகிறேன். நேரம் கிடைக்கும்போதேல்லாம் நிறைய மருத்துவமனைகள் சென்று அன்பபையும், அவர்களிடம் நம்பிக்கையும் தர முயற்சிகிறேன்

அனுயா
இந்த ஆண்டு முதல் என்னை நான் இன்னும் சிறப்பானவளாக ஆக்க விரும்புகிறேன். உடம்பை பராமரித்தல், திறமைகளை வளர்த்து கொள்ளுதல், ஆரோக்கியமான உடல் என்று எல்லா வழியிலும் என்னை மேம்படுத்த விரும்புகிறேன்.

நிக்கி கல்ராணி
புத்தாண்டில் நாம் எடுக்கும் எந்த சபதமும் சரியாக நிறைவேற்ற முடியாமல் போகும். அதனால் அதன் மேல் நம்பிக்கை இல்லாமல், ஒரு வாழ்க்கை நாம் வாழப்போறோம், அந்த வாழ்க்கையை வெற்றிகரமாக திருப்திகரமாக அமைக்க முயற்சிப்போம்

காயத்ரி
வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க வேண்டும், எப்போதும் உடம்பையும், மனதையும் இளமையாக வைத்து கொள்ள வேண்டும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எனக்கான வாய்ப்பை வேறு யாரும் தட்டிப் பறிக்க முடியாது!எனக்கான வாய்ப்பை வேறு யாரும் ... 2017 - டாப் 5 டீசர், டிரைலர், பாடல் வீடியோக்கள் 2017 - டாப் 5 டீசர், டிரைலர், பாடல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in