Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

கவிஞனாக இருக்கும் பாடலாசிரியன் தான் கவனிக்கப்படுவான் - பாடலாசிரியர் யுகபாரதி

09 ஆக, 2015 - 02:40 IST
எழுத்தின் அளவு:
Lyricist-Yugabharathi-interview

'பல்லாங்குழியின் வட்டத்தில் ஒற்றை ரூபாயைப் பார்த்து' தன் திரைப்பயணத்தை ஆரம்பித்தவர், பாடலாசிரியர் யுகபாரதி. கிட்டத்தட்ட 16 ஆண்டுகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை படைத்திருக்கிறார். கடந்த ஆண்டு, 'மனசுல சூரக்காத்தாய்' தாலாட்டி; 'டார்லிங் டம்மக்கு' ஆட்டம் போட வைத்து; 'பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை' என உருக வைத்தவர், இப்போது, 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா'வில், 'ட்ரெண்ட்' அடித்துக் கொண்டிருக்க... பரபரப்பான தன் பாடல் பயணத்திற்கிடையில், அவரிடம் பேசியதில் இருந்து...


யுகபாரதி எப்படிப்பட்ட ஒரு பாடலாசிரியராக அறியப்பட வேண்டும்?


பாடலாசிரியர் என்பதிலும், நல்ல பாடலாசிரியராக அறியப்பட வேண்டும் என்பது தான் என் ஏக்கம். பாடலுக்கான சூழலை, வெறும் கதாபாத்திரத்தின் குரலாக மட்டுமல்லாது, காலத்தின் குரலாகவும் பதிவு செய்வதே, அந்த, 'நல்ல' என்பதன் பொருளாக உணர்கிறேன். கருத்துள்ள கதைகள் வரும்போது, கருத்துள்ள பாடல்களும் வரும் என்பது தான் இயற்கை. ஆனாலும், அது பெரும் சவாலாக இருப்பது தான், இன்றைய திரைச்சூழல். கதைகள், மக்களின் உள்ளத்தை பிரதிபலிக்க தவறுவதால், எங்களுக்கு முன்பிருந்த பாடலாசிரியர்களுக்கு கிடைத்த வாய்ப்புகள், எங்களுக்கு அருகிவிட்டன.


கவிஞருக்கும் பாடலாசிரியருக்கும் உள்ள வித்தியாசம்?


கவிதையை, கவிஞன் மட்டுமே தீர்மானிக்கிறான். பாடலையோ ஒரு குழு தீர்மானிக்கிறது. எனவே, குழுவினரின் ரசனை மட்டத்திற்கு ஏற்பவே ஒரு பாடல் அரங்கேறுகிறது. யதார்த்தம் இதுவே என்றாலும், கவிஞனாக அறியப்பட்ட ஒருவர் எழுதும் பாடலுக்கும், வெறும் பாடலாசிரியராக மட்டுமே அறியப்படும் ஒருவர் எழுதும் பாடலுக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஒரு பாடலாசிரியன் கவிஞனாக இருக்கும் பட்சத்தில் தான், விசேஷ கவனம் பெறுகிறான் என்பது என் எண்ணம்.


டி.இமான் - யுகபாரதி கூட்டணி பற்றி...


இருவரும் நல்ல நண்பர்கள்; ஒருவரை ஒருவர் புரிந்தவர்கள். பாடலுக்குள் எங்களால் இயன்ற அத்தனை விஷயங்களையும் செய்து பார்க்கின்றோம். வரிகள் அழகாக வர வேண்டும் என அவரும், இசை கெடாமல் வார்த்தைகளை பிரயோகிப்பதில் நானும் எடுத்துக்கொள்ளும் அக்கறையே, எங்கள் கூட்டு உழைப்பின் வெற்றி. இடையில் கூட, எங்கள் இருவருக்கும் கருத்து முரண்பாடு என பத்திரிகையில் செய்தி பார்த்தோம். அன்பிற்கு ஏதாவது கருத்து இருக்கிறதா என, அச்செய்தியை எழுதிய பத்திரிகையாளரைத் தான் கேட்க வேண்டும். தவிர, இது கலை உறவு. இதில் வெற்றிகளை விட அனுபவமே பிரதானம்.


சமீபத்தில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அதிகம் பாடல்கள் எழுதியிருக்கிறீர்களே...


சிவகார்த்திகேயனும் என் அன்பிற்குரியவர். அவர் மூலம் என்னுடைய பல பாடல்கள் பெரும் வெற்றி கண்டிருக்கின்றன. குறிப்பாக, 'ஊதா கலரு ரிப்பனை'ச் சொல்லலாம். அவர் நடிக்கும் படங்கள், மக்களிடையே கூடுதலான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது என்பதால், பாடல்களும் வரவேற்புக்கு உரியனவாக மாறுகின்றன. ஒரு முழு திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதுகிறப்போது, அந்தப் படத்தில் பணியாற்றிய பாடலாசிரியன் கூடுதலாக கவனிக்கப்படுகிறான். அந்தப் படங்கள் வெற்றி அடைகிற போது, அந்த வெற்றி அவனுக்கும் சேர்கிறது. அந்த விதத்தில் சிவகார்த்திகேயன் படங்கள் அதிகமும் வெற்றியைக் கண்டிருப்பதால், அவருக்கு அதிக எண்ணிக்கையில் பாடல் எழுதிய நான், அம்பு குறியிட்டு அடையாளப்படுகிறேன். அவ்வளவே!


தற்கால பாடல்களில், 'ஆழம்' குறைவாக இருக்கிறதே...


'ஆம்' என்று சொல்லாவிட்டால், நான் பொய்யன்; 'ஆம்' என்று சொன்னால், நானும் பொறுப்பாளி. இந்த காலத்துப் பாடல்களில், 'ஆழம்' இல்லை என்று வருத்தப்படுகிறவர்கள், இந்த காலத்து அரசியல், கலை இலக்கியங்களில், நீங்கள் சொல்லும் ஆழம் இருக்கிறதா எனவும் பாருங்கள். அரசியலில் ஆழம் இல்லாது போகிற போதெல்லாம், அது திரைப்படத்திலும் வெளிப்படும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)