Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

சமுத்திரகனி கொடுத்த முத்தம்! - சாட்டை யுவன் பேட்டி!

24 ஜூன், 2014 - 10:56 IST
எழுத்தின் அளவு:

சாட்டை படத்தின் ஒரு காட்சியில் நான் நடித்ததை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நின்ற சமுத்திரகனி, நடித்து முடித்ததும். ஓடிவந்து என்னை கட்டிப்பிடித்து கன்னத்தில் மாறி மாறி முத்தம் கொடுத்தார். பிரமாதம், பின்னிட்டே... என்று என்னை தட்டிக்கொடுத்தார். அவரது பாராட்டு எனக்கு விருது கிடைத்தது போல் இருந்தது என்கிறார் சாட்டை யுவன். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி இதோ...


* எந்தமாதிரியான கதைகளுக்கு முதலிடம் கொடுக்கிறீர்கள்?


சினிமாவில் பாசக்கார நண்பர்கள்தான் எனக்கு முதல் என்ட்ரி. அதையடுத்து, சாட்டை படம். அந்த படம் மெகா ஹிட் என்பதால் நானும் பேசப்பட்டேன். அதையடுத்து, கீறிப்புள்ள, சொகுசு பேருந்து போன்ற படங்களில் நடித்தேன். இப்போது செல்வபாரதி இயக்கும் காதலைத்தவிர வேறொன்றுமில்லை படத்தை முடித்து விட்டு, அய்யனார் வீதி, இந்த பொண்ணுங்களே இப்படித்தான் போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இதில் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் நடிக்கும் இந்த பொண்ணுங்களே இப்படித்தான் படத்தின் டைட்டீல் மாற வாய்ப்பிருக்கிறது. மேலும், எந்த மாதிரியான கதைகளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதை இன்னும் நான் முடிவு செய்யவில்லை. என்னைப்பொறுத்தவரை எந்த மாதிரியான கதையாக இருந்தாலும் அது ரசிகர்களுக்கு பிடிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். இப்போதைக்கு அதை மனதில் கொண்டுதான் கதைகளை செலக்ட் பண்ணி நடித்து வருகிறேன்.


* காதலைத்தவிர வேறொன்றுமில்லை படத்தில் வித்தியாசமான ரோலில் நீங்கள் நடித்திருப்பதாக கூறப்படுகிறதே?


இதுவரை நான் கலகலப்பான கதைகளில் நடித்திருக்கிறேன். ஆனால், இந்த படத்தைப்பொறுத்தவரை எப்போதுமே சோகம் இழையோடிய முகத்துடன் இருப்பேன். என் முகத்தில் சிரிப்பு என்பதையே பார்க்க முடியாது. முக்கியமாக, என்னை ஒரு பெண் உருகி உருகி காதலிப்பாள். ஆனால் எனக்கோ காதலே பிடிக்காது. அந்த அளவுக்கு என் சின்ன வயதில் நடந்த ஒரு நிகழ்வு என்னை மாற்றி வைத்திருக்கும். அதனால் படம் முழுக்க சீரியசான கேரக்டரில் முதன்முறையாக நடித்திருக்கிறேன். அதனால் முடிந்தவரை இந்த படத்தில் மாறுபட்ட பர்பாமென்ஸை கொடுக்க ட்ரை பணணியிருக்கிறேன்.


* 18 வயது ஹீரோவான நீங்கள், கதாநாயகிகளுடன் கட்டிப்பிடித்து நடிக்கும் காட்சிகளை எப்படி உணருகிறீர்கள்?


சாட்டை படத்தில் மகிமாவுடன் நெருங்கி நடித்தபோது ரொம்பவே கூச்சமாக இருந்தது. உடம்பெல்லாம் நடுங்கியது. ஒரு பாடலில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போன்று நடிக்க வேண்டும் என்று சொன்னபோது, பயமாக இருந்தது. அவர் கை என் மேல் பட்டாலே நடிப்பு வராமல் பதறிப்போய் நின்றேன். ஆனால், ஒரு இரண்டு நாட்கள் அப்படி நடித்தபிறகு, அந்த படபடப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. அதன்பிறகு கட்டிப்பிடித்து நடிப்பதும் மற்ற காட்சிகளைப்போன்று எளிதாக வரத் தொடங்கி விட்டது. மேலும், இப்போது ஒவ்வொரு படத்தையும் உணர்ந்து நடிப்பதால், அந்த கேரக்டராகவே மாறிப்போகிறேன். அதனால், கூச்சம், நடுக்கம் என்ற விசயங்களுக்கு இடமே இல்லை. எல்லாமே காணாமல் போய்விட்டது.


* தமிழ் சினிமாவில் உங்களை அதிகம் கவர்ந்த நடிகை யார்?


காஜல் அகர்வால். நல்ல அழகான நடிகை மட்டுமின்றி நன்றாகவும் நடிக்கிறார். விஜய் சாருடன் அவர் நடித்த துப்பாக்கி, ஜில்லா என்ற இரண்டு படங்களுமே எனக்கு ரொம்ப பிடிக்கும். குறிப்பாக ரொமான்ஸ் காட்சிகளில் அவரது பார்பாமென்ஸ் ரசிக்கும்படியாக இருக்கும். அதனால் மற்ற நடிகைகளிடமிருந்து காஜல்அகர்வாலிடம் ஒரு புதுமையான நடிப்பை நான் உணர்கிறேன்.


* காஜல்அகர்வாலுடன் டூயட் பாட வேண்டும் என்ற ஆசை உள்ளதா?


நான் ஆசைப்படலாம், ஆனால் நானும், அவரும் நடித்தால் அக்காள் தம்பி போல் இருக்கும். அவர் மட்டுமின்றி, இப்போதைய கதாநாயகிகள் பலருடன் நான் நடிக்க முடியாது. அதனால் அவர்களின் நடிப்பை ரசிப்பதோடு நிறுத்திக்கொள்கிறேன்.


* நெகடீவ் ரோல்களில் நடிக்கும் ஐடியா உள்ளதா?


அஜீத் போன்ற முன்னணி நடிகர்களே நெகடீவ் ரோல்களில் நடிக்கும் காலம் இது. தொடர்ந்து பாசிட்டீவாக நடித்து விட்டு திடீரென்று நெகடீவ் ரோலில் நடிக்கும்போது நடிப்பவருக்கும், படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கும் ஒரு சேஞ்சாக இருக்கும். அப்படி நடிப்பதில் எனக்கும் ஆர்வம் உண்டு. ஆனால், இன்னும் அந்த மாதிரியான கதைகளுடன் என்னை எந்த இயக்குனரும் சந்திக்கவில்லை. அதனால், எதிர்காலத்தில் அந்த மாதிரி கதைகள் கிடைக்கும்போது நெகடீவ் ஹீரோவாகவும் என்னை ப்ரூப் பண்ணுவேன்.


* உங்களை விட சீனியர் நடிகை சரண்யாமோகனுடன் நடித்த எக்ஸ்பீரியன்ஸ் எப்படி இருந்தது?


சரண்யா மோகன் ரொம்ப நல்ல நடிகை. எந்தவொரு காட்சியையும் அழகாக உள்வாங்கி நடிக்கக்கூடியவர். கவர்ச்சிகரமான காட்சிகளாக இருந்தாலும், அதை உடம்பில் வெளிப்படுத்தாமல் கண்களில் காட்டக்கூடிய நடிகை. அதனால் அவர் எனக்கு ஜோடியாக நடிக்கப்போகிறார் என்றதும் சந்தோசமாக இருந்தது. அதிலும் இரண்டு பேருக்குமே எதிரும் புதிருமான கேரக்டர்கள் என்பதால் நடிப்பது சேலஞ்சிங்காகவும இருந்தது. எனக்கு எதிரில் நிற்பவர் திறமையான நடிகை என்பதால், போட்டி போட்டு நடித்தேன். அதனால் ஸ்பாட்டில் சரண்யாமோகனுடன் நான் நடித்த காட்சிகளுக்கு நல்ல கைதட்டல் கிடைத்தது.


* சமுத்திரகனியின் இயக்கத்தில் நடிக்கும் ஆசை உள்ளதா?


சமுத்திரகனி பெரிய டைரக்டர். அவருடன் சாட்டை படத்தில் நடித்தது நல்ல அனுபவம். மேலும், அந்த ஸ்பாட்டில் எனக்கு நிறைய டிப்சும் கொடுத்திருக்கிறார். ஒரு காட்சியில் நான் நடித்ததை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நின்ற சமுத்திரகனி சார், நான் நடித்து முடித்ததும். ஓடிவந்து என்னை கட்டிப்பிடித்து கன்னத்தில் மாறி மாறி முத்தம் கொடுத்தார். பிரமாதம், பின்னிட்டே என்று என்னை தட்டிக்கொடுத்தார். அவரிடமிருந்து இப்படியொரு ரியாக்சன் வரும் என்று எதிர்பார்க்காத எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஆனபோதும் அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டுமென்ற ஆசையை இதுவரை அவரிடம் வெளிப்படுத்தியதில்லை. எனது நடிப்பைப்பற்றி அவருக்கும் தெரியும் என்பதால், அதற்கான சந்தர்ப்பம் வரும்போது கண்டிப்பாக அழைப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.


* சினிமாவில் படத்துக்குப்படம் காதலித்து வரும் உங்களுக்கு நிஜத்தில் காதலித்த அனுபவம் உள்ளதா?


காதல் ரொம்ப பிடிக்கும். ஆனால், சின்ன வயதிலேயே கதாநாயகன் ஆகி விட்டதால், பள்ளியில் காதலிக்கிற வாய்ப்பு அமையவில்லை. படிப்பு, நடிப்பு என்பதில் கவனம் செலுத்தவே போதுமான நேரம் கிடைக்காமல் பிசியாக இருக்கிறேன். ஆனபோதும், எதிர்காலத்தில் காதல் வரலாம், வராமலும் இருக்கலாம். காதல் எப்போது எப்படி வருகிறது என்பது யாருக்குமே தெரியாதே. ஆக, காதல் வந்தாலும் சந்தோசம், வராவிட்டாலும் சந்தோசமே என்கிறார் யுவன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)