தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் | பிளாஷ்பேக்: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை இசை அமைப்பாளராக்கிய ஸ்ரீதர் |
சாக்லேட் நாயகனாக இருந்த நடிகர் ஷாமை ஆக்ஷன் ரூட்டிற்கு மாற்றியிருக்கும் படம் அகம் புறம். டைரக்டர் திருமலை இயக்கும் இந்த படத்தில் நாயகன் ஷாமுக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி நடிக்கிறார். விரைவில் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீலிஸ் ஆகவிருக்கும் அகம் புறம் படத்தின் ஸ்பெஷல் ஹைலைட்ஸ் :-
* நடிகர் ஷாம் முதன் முறையாக நெகட்டிவ் ரோலில் (கடத்தல் கும்பல் தலைவனாக) நடித்திருக்கிறார்.
* மலாக்கா தீவில் கண்காட்சிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் போர்ச்சுகீசிய கப்பலில் மலேசிய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
* மலேசியா டூ சிங்கப்பூர் போகும் ஸ்டார் கோஸ்ட் கப்பலில் சூட்டிங் நடத்தியபோது நிலை தடுமாறி ஷாம், மீனாட்சி, டைரக்டர் திருமலை, கேமராமேன் முரளி உள்ளிட்டவர்கள் நடுக்கடலில் தவித்தனர்.
* படத்தில் முதன் முறையாக இந்தி கிளாமர் நடிகை காஷ்மீரா ஷா ஷாமுடன் நடனம் ஆடியிருக்கிறார்.
* சென்னை மதுரவாயலில் உள்ள ஓடமா நகரில், பிற ஊர்களில் உள்ள கிராமப்புறங்களைப் போன்ற இடத்தை தேர்ந்தெடுத்து மிக அழகாக அந்த கிராமத்தை படம் பிடித்துள்ளனர்.
* இதுவரை நடித்த படங்களில் இல்லாத அளவிற்கு நடிகை மீனாட்சியின் கிளாமர் காட்சிகள் இடம்பெறுகின்றன.
* மனித வாழ்க்கையில் அனறாடம் நடக்கும் சின்னச் சின்ன தவறுகளையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் நேரடியாக காட்சியமைக்கப்பட்டுள்ளது.
* ஆனந்த்ராஜ் இதுவரை பண்ணாத நல்ல போலீஸ் கேரக்டரில் நடித்திருக்கிறார்.
* இயக்குனர் பணியை ஏற்றிருந்த திருமலை எதிர்பாராதவிதமாக இப்படத்தின் மூலம் டி கிரியேஷன்ஸ் பெயரில் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.
* சுந்தர்சி.பாபு இசையில் லண்டன், கனடாவில் பாடல் மிக்ஸிங் பதிவு செய்யப்பட்டுள்ளது.
* எந்த இடையூறும் இல்லாமல் தனி கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக இறுதி ரீ-ரெக்கார்டிங், ஸ்பெஷல் எபெக்ட் உள்ளிட்ட பணிகள் மலேசியா, சிங்கப்பூரில் நடந்துள்ளது.
- தினமலர் சினி டீம் -