ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டு மாணவன் போட்ட வழக்கு : அமரன் பட செல்போன் எண் நீக்கம் | சூரி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை! | ஒரு உயிர் பலி : சிறப்புக் காட்சிகளை ரத்து செய்தது தெலங்கானா அரசு | புஷ்பா 2 - முதல்நாள் வசூல் முதல் கட்டத் தகவல் | டொவினோ தாமஸின் ‛ஐடென்டிடி' டீசர் வெளியானது | அரபு நாடுகளில் புஷ்பா 2 படத்தின் 19 நிமிட காட்சிகள் நீக்கம் | சுரேஷ் கோபி மகனுக்கு சண்டை சொல்லித்தரும் மம்முட்டி | புஷ்பா 2 - அமெரிக்காவில் முதல் நாளில் 4 மில்லியன் வசூல் | பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ : தெலுங்கில் சாதிப்பாரா ஜோதி கிருஷ்ணா | இறுதிக்கட்டத்தில் 'திருவள்ளுவர்' படம் : இளையராஜா இசை |
அம்மா காஷ்மீரி... அப்பா கன்னடர்... ஆனாலும் காஷ்மீரி, கன்னடம், கொங்கணி மொழிகளை காட்டிலும் அழகு தமிழில் பேசி அசத்துகிறார். கல்லுாரி காலங்களிலேயே ஆங்கில நாடகங்களை நடத்தி தமிழகம் மட்டுமின்றி ஆஸ்திரேலியா வரை அக்கலையை கொண்டு சென்றிருக்கிறார். சினிமாவிலும் கால் பதித்து வில்லி, குணசித்திர கதாபாத்திரங்களில் ஜொலிக்க துவங்கியிருக்கிறார் பிரியதர்ஷினி ராஜ்குமார். 2015ல் ரேமாவில் துவங்கிய இவரது சினிமா பயணம் சார்பட்டா பரம்பரை, ஜவான், அச்சம் என்பது மடமையடா என தற்போது வெளியான கங்குவா வரை நீண்டு கொண்டே செல்கிறது.
அவர் மனம் திறந்ததாவது: அப்பா ராஜ்குமார் மங்களூரு. அம்மா கரியாலி காஷ்மீரி. டில்லியில் டாக்டர்களாக பணிபுரிந்த போது திருமணம் செய்தனர். பிறகு சென்னைக்கு குடிபெயர்ந்தனர். நான் படித்தது, வளர்ந்தது சென்னையில். சென்னை ஓவியக்கலைக் கல்லுாரியில் படிக்கும் போது நாடக சபாக்கள் நடத்தும் நாடகங்களில் நடித்திருக்கிறேன். என் நாடகங்களை பார்த்து இயக்குனர் பாலசந்தர் அவருடைய 'பிரேமி' நாடகத்தில் நடிக்க வைத்தார்.
பிறகு தொழில் விஷயமாக ஆஸ்திரேலியாவில் குடிபெயர்ந்தோம். அங்கும் நாடகங்களை விடவில்லை. 2015ல் மீண்டும் சென்னைக்கு திரும்பிய போது விளம்பர படங்களில் வாய்ப்பு கிட்டியது. ரேமோ படத்தில் நடிக்கும் வாய்ப்பும் வந்தது.
பிறகு பல படங்களில் நடித்திருந்தாலும் 'கவண்' படத்தில் வில்லி போன்ற கதாபாத்திரம் பிரேக் பெற்று கொடுத்தது. வில்லியாக நடிக்க தயங்கினேன். ஆனால் இயக்குனர் கே.வி.ஆனந்த் தைரியம் கொடுத்தார். அவர் சொன்னது போல தமிழ் சினிமாவில் என்னை கவண் அடையாளம் காட்டியது.
படத்தை பார்த்து விட்டு எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடித்திருப்பதாக அவர் அனுப்பிய குறுந்தகவலை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். அதுமட்டுமின்றி பத்திரிக்கையாளர்கள் தொடர்பான படம் 'கவண்' என்பதால் அவர்களும் பெரிய பாராட்டு விழா நடத்தியதை மறக்க முடியாது.
'சார்பட்டா பரம்பரை' படத்தில் ஆங்கிலோ இந்தியன் கதாபாத்திரமும் பெயர் பெற்று கொடுத்தது. அதையடுத்து விக்ரம், ஜவான், பிச்சைக்காரன் என பல வாய்ப்புகள் கிடைத்தன. தற்போது வெளியான பிளடிபெக்கர் படம் ஓ.டி.டி.தளத்தில் வரவேற்பை பெற்று வருவது சந்தோஷமாக உள்ளது.
நான் நடித்த நடிகர் சரத்குமாரின் 150 படமான ஸ்மைல் மேன், ஸ்ரீராம்கார்த்திக் நாயகனாக நடித்த மெசஞ்சர் படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. இதுதவிர சிங்கம்மச்சான் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து முடித்துள்ளேன்.
இதுதவிர சரஸ்வதி எஜூகேஷனல், கல்சுரல், சாரிடபிள் டிரஸ்ட் துவங்கி காஷ்மீர் அகதிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறேன். பரதம், கதக் உள்ளிட்ட கலைகளை மாணவர்களுக்கு கற்று கொடுத்தும் வருகிறேன். சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் கலாசார திருவிழா நடத்தி பரதநாட்டியம், கதக் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன்.
தமிழகம் வந்தாரை வாழவைக்கும் மாநிலம். தமிழ் கலை, கலாசாரத்தை வரும் தலைமுறையினருக்கு கொண்டு செல்வதுடன் சினிமாவில் தனி அடையாளம் பெற வேண்டும் என்பதே ஆசை என்றார்.