மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
அழகும், திறமையும் அனைவருக்குமே அமைவதில்லை. அவை அமைந்து, விடா முயற்சியால் மாடலிங், சின்னத்திரை, வெள்ளித்திரையில் கால் பதித்தும் தனக்கு பிடித்த கேரக்டர்கள் இருந்தால் மட்டுமே வாய்ப்புகளை ஒப்புகொள்கிறவர் இவர். முதல் முயற்சியிலேயே மிஸ் தமிழ்நாடு 2021 பட்டம் வென்ற அழகு பதுமை. தொடர்ந்து சீரியல், சினிமாக்களில் ரவுண்ட் வந்து கொண்டிருந்தாலும் ஹீரோயினியாகும் எண்ணம் துளியுமில்லை; மக்கள் மனதில் நிற்கும் நல்ல கேரக்டர்களில் நடித்தாலே போதும் என்கிறார் தச்சனி சாந்த சொரூபன். இவரது தந்தை சாந்தசொரூபன், கார்கில் போரில் நாட்டிற்காக வீரமரணம் அடைந்தவர்.
தச்சனி சாந்த சொரூபன் மனம் திறந்ததாவது:
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிபட்டு சொந்த ஊர். அப்பா சாந்தசொரூபன் வேலுாரைச் சேர்ந்தவர். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தார். அவருக்கும் அம்மா ஜோதிக்கும் 1997ல் திருமணம் நடந்தது. மறு ஆண்டே நான் பிறந்து விட்டேன். ஆனால் அடுத்தாண்டே கார்கில் போரில் அப்பா வீரமரணம் அடைந்தார். அம்மாவுக்கு கருணை அடிப்படையில் வருவாய்த்துறையில் தமிழக அரசு பணி வழங்கியது. அம்மா அரவணைப்பில் தான் வளர்ந்தேன்.
வாலாஜாவில் அம்மா பணிபுரிந்ததால் அங்கு பள்ளி படிப்பை படித்தேன். பட்டப்படிப்பு முடித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். கோவிட் நேரத்தில் அந்த பணியிலிருந்து விலகினேன்.
மீடியாக்களில் பேசப்பட வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. பார்க்க அழகாக இருந்ததால் பார்ப்பவர்கள் என் ஆசைக்கு துாபம் இட்ட வண்ணம் இருந்தனர். சிலர் மாடலிங் செய் என ஊக்கம் கொடுத்தனர். அழகி போட்டிகளில் பங்கேற்க துவங்கினேன். முதன் முறையாக 2021 மிஸ் தமிழ்நாடு போட்டியில் பங்கேற்று பட்டம் பெற்றதை வாழ்க்கையில் மறக்க முடியாது. பிறகு 2022 மிஸ் குயின் ஆப் இந்தியா, தொடர்ந்து மிஸ் டாஸ்லிங் ஸ்மைல் பட்டங்களையும் வென்றுள்ளேன்.
இதன் மூலம் விளம்பர படங்களில் வாய்ப்பு கிட்டியது. 2022ல் சரிகமாவின் இசை ஆல்பத்தில் நடித்தேன். நல்லா ரீச் ஆச்சு. விதார்த் நடித்த 'பயணிகள் கவனிக்கவும்' படவாய்ப்பு கிட்டியது. அதில் படம் முழுக்க வரும் கேரக்டர்.
பிறகு திருசெல்வம் இயக்கிய எதிர்நீச்சல் சீரியலில் கொற்றவை என்ற ஐ.பி.எஸ்., கேரக்டர் கிடைத்தது. இந்த சீரியலின் ௨ம் பாகத்திலும் அந்த கேரக்டரில் நடித்து வருவதால் மக்கள் என்னை ஐ.பி.எஸ்., கொற்றவை என அழைக்க துவங்கி விட்டனர். அம்மா பச்சை மையில் கையெழுத்திடுமளவுக்கு நான் அதிகாரியாக வேண்டும் என்பார். ஆனால் 'நிழல் உலகில்' அந்த கனவு நனவாகியிருக்கிறது.
தற்போது பெரிய பேனர் படமொன்றில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. என்னை பொறுத்தவரையில் ஹீரோயினாக ஆசையில்லை. மக்கள் மனங்களில் நிற்கும்படி ஒன்றிரண்டு சீன்கள் வந்தால் கூட போதும். அப்படிப்பட்ட கேரக்டர்களில் நடிக்கவே ஆசை.
ரஜினியை பிடிக்கும். அடுத்து நடிகர் விஜயை பிடிக்கும். அவர் அரசியலுக்கு சென்றாலும் தொடர்ந்து என்னை போன்ற ரசிகர்களுக்காக நடித்தால் நன்றாக இருக்கும்.
ஓய்வு நேரங்களில் வரலாற்று சிறப்பு மிக்க சுற்றுலா தலங்களுக்கு அடிக்கடி சென்று விடுவேன். அடிக்கடி செல்லுமிடங்களில் வேலுார் கோட்டையும் ஒன்று. தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு அடிக்கடி சென்று விடுவேன். அங்கு வராகி அம்மனை தரிசித்தாலே புது உற்சாகம் பிறந்து விடும். ஏலகிரி எஸ்டேட்டிற்கும் சென்று வருவேன். சுவிட்சர்லாந்து செல்ல ஆசை இருக்கிறது.
நன்றாக சாப்பிட மட்டுமின்றி நன்றாக சமைப்பேன். ஆனால் அம்மா உனக்கு எதற்கு இந்த வேலை என, விடமாட்டார். அப்பா மறைவுக்கு பிறகு எனக்கு அம்மா தைரியத்தையும், ஊக்கத்தையும் கொடுத்து வருவதால் இந்தளவுக்கு வர முடிந்தது.
நடிப்பை தாண்டி திரைக்கு பின்னால் இருக்கும் விஷயங்களையும் கற்று கொள்ள வேண்டும். இயக்குனராக ஆசையுள்ளது. காலம் அந்த ஆசையையும் நிறைவேற்றி வைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.