சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் |

சினிமா உலகில் ஹீரோயின், விருது கனவுகளுடன் நுழையும் பெண்கள் சிலர் மட்டுமே. எந்த பின்புலம் இல்லாமல் 'சான்ஸ் கிடைத்தால் போதும் நடிப்பு திறமையால் முன்னணி இடம் பிடிக்கலாம்' என்ற நம்பிக்கையில் வரும் பெண்கள் அதிகம். நல்ல சிந்தனை கொண்ட சில இயக்குநர்கள் இருக்கும் வரை பெண்களின் திறமைக்கு மதிப்பு இருக்கத்தான் செய்கிறது, என்கிறார் சென்னையை சேர்ந்த நடிகை திவ்யா.
தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக அவர் நம்மிடம்...
சமீபத்தில் வெளியான விக்ரம் பிரபுவின் 'லவ் மேரேஜ்' படத்தில் ஹீரோவின் அம்மாவாக நடித்துள்ளேன். படத்திற்கு நல்ல விமர்சனமும் பெண்களிடம் வரவேற்பும் கிடைத்துள்ளது. வெளியே செல்லும்போது பலர் என்னை அடையாளம் தெரிந்து அன்புடன் 'ஹாய்...', சொல்லி செல்வது மகிழ்ச்சியாக உள்ளது.
எனது முதல் படம் ஷார்வி இயக்கிய 'பெட்டர் டுமாரோ'. போதைப் பொருள் ஆபத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட உண்மை சம்பவம் தொடர்பான கதை. ஹீரோ மானவ், இப்படத்திலும் ஹீரோவின் அம்மா ரோல் எனக்கு. தவிர 'பூங்கோதை', அருண் சிதம்பரம் இயக்கி நடித்த 'ஹெட் நர்ஸ்', மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்கள், சீரியல்களில் குணசித்திர வேடத்தில் நடித்துள்ளேன். 6 குறும்படங்களில் மெயின் ரோல், 'கர்மா' கன்னட வெப் சீரிஸிலும் நடித்துள்ளேன்.
இதுவரை ஹீரோக்களுக்கு அம்மா கேரக்டர் தான் அதிகம் கிடைத்துள்ளது. 'லவ் மேரேஜ்' படத்திற்காக 32 நாட்கள் சத்தியமங்கலம் அருகே ஷூட்டிங் நடந்தது. அப்போது விக்ரம் பிரபுவின் நிஜ அம்மாவாகவே மாறிவிட்டேன். பள்ளி, கல்லுாரி நாட்களில் நாடகங்கள் தயாரித்து இயக்கியுள்ளேன். கிளாசிக் டான்ஸ் நன்றாக வரும். சினிமாவிற்கு நான் லேட்டாக தான் வந்தேன்.
நடிப்பில் முக பாவங்கள், வசன உச்சரிப்பு முக்கியம். கேமரா முன் கண் அசைவு, உடல் மொழி, உணர்வு வெளிப்பாடு மூன்றும் அவசியம். இவற்றை கொரியன், ஜப்பானிஷ் மொழிப் படங்களில் அதிகம் பார்க்கலாம். நடிப்பு தாகத்தால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதுபோன்ற சினிமாக்களை தேடிப்பிடித்து பார்ப்பேன்.
எனக்கு ரொம்ப பிடிச்ச 'வில்லி' கேரக்டர் இதுவரை கிடைக்கவில்லை. கிடைத்தால் நடிப்பில் கில்லியாய் சொல்லியடிப்பேன். குணசித்திர வேடங்களில் தற்போது 3 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.
உளவியல் கவுன்சிலராகவும் உள்ளேன். யாருக்கு என்ன பிரச்னை என்றாலும் கண்டிப்பாக தீர்வு உள்ளது என்ற நம்பிக்கையை ஏற்படுத்திவிடுவேன். கொரோனா பேரிடர் நேரத்தில் பலருக்கும் வீடுகளுக்கு சென்று உளவியல் கவுன்சிலிங் கொடுத்துள்ளேன். தற்போது நடிப்பு தான் என் குறிக்கோள், பேஷன் என்கிறார் திவ்யா.