செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
சுந்தரி தொடரின் கதாநாயகியான கேப்ரில்லா செல்லஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறிவிட்டார். இவரை பலரும் ரோல்மாடலாக கொண்டுள்ளனர். பல கல்லூரி மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளுக்கும் சிறப்பு விருந்தினராக அழைக்கின்றனர். இந்நிலையில், இவர் அண்மையில் அவரது சோஷியல் மீடியாவில் வெளியிட்ட பதிவு ஒன்றில் 'அனைத்து வன்மங்களையும் அனைத்து பேச்சுகளையும் தாங்கும் பக்குவம் நமது வாழ்க்கையின் அருமை தெரியும்போதே புரியும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்க்கும் பலரும் கேப்ரில்லா இவ்வளவு அழுத்தமான கோபமான மெசேஜை யாருக்காக பதிவிட்டிருக்கிறார்? என கேள்வி கேட்டு வருகின்றனர். நடிக்க ஆரம்பித்த ஆரம்பகாலக்கட்டத்தில் கருப்பு நிறம், சுமாரான மூஞ்சி என பல காரணங்களுக்காக கேப்ரில்லா விமர்சிக்கப்பட்டார். ஆனால், அந்த தடையெல்லாம் உடைத்து தான் இன்று மக்களின் பிரபலமான நடிகை பட்டியலில் கேப்ரில்லா இடம்பிடித்துள்ளார். இதை குறிப்பிட்டு தான் கேப்ரில்லா இந்த பதிவை போட்டிருப்பார் என ரசிகர்கள் தங்கள் கருத்தை கூறி வருகின்றனர்.