அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர் | இனி ஹீரோ தான்: நடிகர் சூரி 'பளீச்' | பிளாஷ்பேக்: சர்வதேச விருதினை வென்றெடுத்த முதல் தமிழ் திரைப்படம் “வீரபாண்டிய கட்டபொம்மன்” | ஜுன் மாதத்தில் 4 பான் இந்தியா திரைப்படங்கள் ரிலீஸ் | 'விக்ரம்' டிரைலர் சாதனையை முறியடித்த 'தக் லைப்' டிரைலர் | நயன்தாரா நடிப்பது பற்றிய வீடியோ, 'இவ்ளோ சுமாரா' எடுத்திருக்க வேண்டுமா? | ஆட்டுக்கார அலமேலு, முத்து, தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் - ஞாயிறு திரைப்படங்கள் | தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? | பால்கே பயோபிக் ; ராஜமவுலி குழுவினர் சந்திக்கவேயில்லை - பால்கே பேரன் |
சின்னத்திரை நடிகர்களில் ஜோடியாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளனர் சஞ்சீவ் - ஆல்யா மானசா தம்பதியினர். சஞ்சீவ் தனியார் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் ஹீரோவாகவும், ஆல்யா மானசா இனியா தொடரில் ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களது பிரபலத்தை பயன்படுத்தி இணையத்தில் நூதன மோசடி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
அதாவது ஆல்யா சில தினங்களுக்கு ஒரு பேட்டியில் ஆல்யா மானசா தொகுப்பாளர் அஸ்வத்திடம் ஒரு டிரேடிங் கம்பெனியில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என்று சொல்வதை போலவும், அந்த தொகுப்பாளர் தனக்கு உடனடியாக ஆயிரக்கணக்கில் லாபம் கிடைத்துவிட்டது என்று கூறுவதை போலவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த லைவ் நிகழ்ச்சியை ஆர்பிஐ தலையிட்டு நிறுத்திவிட்டது போலவும் பரபரப்பாக தலைப்பு வைத்து வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மோசடி குறித்து அறிந்த சஞ்சீவ் மற்றும் ஆல்யா உடனடியாக அந்த லிங்கை தங்களது ஸ்டோரியில் வைத்து இது பொய்யான மற்றும் பணமோசடி தொடர்பான செய்தி என எச்சரித்துள்ளனர்.