ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பிக்பாஸ் சீசன் 7-ல் பிரபல எழுத்தாளரும், நடிகருமான பவா செல்லத்துரை என்ட்ரி கொடுத்தது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அவரும் பிக்பாஸ் வீட்டில் வரிசையாக கதைகள் சொல்லி அசத்தி வந்தார். அவர் மீது முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான சனம் ஷெட்டி புகார் ஒன்றை வைத்தார். சக ஹவுஸ்மேட்டுகளும் அவரை சோம்பேறி என்று கூட கிண்டல் செய்தனர். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ள பவா செல்லத்துரை, 'இந்த வீட்டுக்கு வரும் போது சூழ்ச்சிகள் சதிகள் இருக்கும் என்று மட்டும் தான் நினைத்தேன். ஆனால், இங்கு அதிகமாக வன்மம் தான் இருக்கிறது. இங்கிருக்கும் டாஸ்க்குகளை செய்யவும் என் உடல் ஒத்துழைக்கவில்லை. இதனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறேன்' என்று கூறி வெளியேறிவிட்டாராம். இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பவா செல்லத்துரை மீண்டும் விளையாடினால் நன்றாக இருக்கும் என்று தங்கள் விருப்பத்தை சோஷியல் மீடியா மூலமாக பிக்பாஸிடம் தெரிவித்து வருகின்றனர்.