பிளாஷ்பேக்: எம் ஜி ஆர் நடிக்க இருந்து, பின் கைவிடப்பட்ட அவரது “உடன்பிறப்பு” திரைப்படம் | உரிமைக்குரல், நட்புக்காக, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | சவுந்தர்யா பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படும் பிரியங்கா மோகன் | சிம்பு, தனுஷ் மோதல் இருக்கிறதா : சமுத்திரக்கனி பதில் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் ‛ரணபலி' படத்தின் முதல் பாடல் வெளியானது | துரந்தர் 2 படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்ட யாமி கவுதம் | மார்ச் 6ல் ஜீ5 ஓடிடியில் வெளியாகும் காந்தி டாக்ஸ் | பிரதமர் மோடியுடன் சந்திப்பு குறித்து ராஷ்மிகா நெகிழ்ச்சி | ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' : ஆரம்பமானதன் வரலாறு… | அதிக லைக்குகள் பெற்ற ராஷ்மிகா திருமணப் பதிவு |

சின்னத்திரையில் 'கனா காணும் காலங்கள்' தொடரின் மூலம் அறிமுகமான பிளாக் பாண்டி, தொடர்ந்து வெள்ளித்திரையிலும் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர், உதவும் மனிதம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் மருத்துவம், கல்வி, ரத்ததானம் மற்றும் உணவு வழங்குதல் உள்ளிட்ட பல நற்பணிகளை கடந்த சில வருடங்களாக செய்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் பொருளாதார சரிவில் சிக்கியுள்ள இலங்கை மற்றும் இலங்கை தமிழ் மக்களுக்கு இவர் தனது உதவும் மனிதம் அமைப்பின் வழியே சில உதவிகளை செய்தார். இதனால் பிளாக் பாண்டிக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. யாரிடம் அனுமதி பெற்று இலங்கைக்கு சென்றீர்கள்? என போலீஸ் தரப்பிலும், வருமானவரித்துறை தரப்பிலும் பிளாக் பாண்டியை விசாரித்து வருகின்றனர். மேலும், உதவும் மனிதம் டிரெஸ்டுக்கு வழங்கப்பட்ட 80ஜி வருமான வரி சலுகை ரத்து செய்யப்படும் எனவும் மிரட்டியுள்ளனர்.
இந்த சிக்கல் குறித்து பிளாக் பாண்டி, 'நான் மனிதாபிமான அடிப்படையில் தான் உதவ சென்றேன். இவ்வளவு சட்ட சிக்கல்கள் வரும் என்று தெரியாது. வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து வருமானவரித்துறைக்கு உரிய விளக்கம் தரலாம் என்று இருக்கிறேன்' என கூறியுள்ளார். பிளாக் பாண்டியின் உதவும் குணம் இப்படி அவருக்கே பிரச்னையானதை நினைத்து பலரும் வருத்தப்பட்டு வருகின்றனர்.