மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் | ஹிந்தியில் ஏ.ஆர் ரஹ்மானுக்கு பாடல் வரிகள் இரண்டாம் பட்சம் தான் : பாடகர் ரப்பி ஷெர்கில் | மங்கத்தா, திரவுபதி 2 மோதல்... மாமன், மச்சான் மோதலா | ஆண்கள் பற்றி எந்த கமெண்ட்டும் சொல்லாத தபு |

ரஜினிகாந்த் நடித்த 'ஊர்காவலன்', விஜயகாந்த் நடித்த சிறைப்பறவை, என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், கருப்பு நிலா உள்பட சுமார் 20க்கும் மேலான திரைப்படங்களை இயக்கியவர் மனோபாலா. மேலும் இவர் நூற்றுக்கும் மேலான திரைப்படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
'சதுரங்க வேட்டை' 'பாம்பு சட்டை' உள்ளிட்ட படங்களை தயாரித்தும் இருக்கிறார். தற்போது மனோ பாலா வித்தியாசமான தோற்றத்தில் முதல் முறையாக வெப் தொடர் ஒன்றில் நடித்து இருக்கிறார். மிஸ்டர் உத்தமன் என்று பெயர் வைத்து இருக்கும் இந்த வெப் தொடரை நிஷாந்த் லோகநாதன் இயக்கி இருக்கிறார். இதில் முதன்மை கதாபாத்திரத்தில் சச்சின் நாச்சியப்பன் நடிக்கிறார். இவர் நயன்தாராவுக்கு தம்பியாக நெற்றிக்கண் படத்தில் நடித்திருந்தார். யூடியூப், விளம்பர படங்களில் நடித்த பிரணிகா தக்ஷு இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மிஸ்டர் உத்தமன் வெப் தொடர் காதல், காமெடி, பேண்டஷி கலந்து உருவாக்கி இருக்கிறார்கள். இந்த வெப் தொடர் செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் ஸ்டே டியூன் என்ற யூடியூப்பில் வெளியாக இருக்கிறது.




