ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்த, ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு, நடிகர் விஜய், 40 லட்சம் ரூபாய் நுழைவு வரி செலுத்தி உள்ளதாக, வணிக வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரிட்டனில் இருந்து 2012ல் நடிகர் விஜய், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை வாங்கியிருந்தார். கார் வாகன பதிவுக்காக, வட்டார போக்குவரத்து அலுவலகம் சென்றபோது, நுழைவு வரி தொடர்பான ஆட்சேபனை இல்லா சான்றிதழ் சமர்ப்பிக்கும்படி, போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறக்குமதி காருக்கு நுழைவு வரி செலுத்தும் பட்சத்தில், சான்றிதழ் வழங்குவதாக வணிக வரி உதவி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், 1 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, விஜய் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த நிலையில், விஜய் நுழைவு வரியாக, 40 லட்சம் ரூபாய் வரை செலுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, வணிக வரி அதிகாரிகள் கூறியதாவது: இறக்குமதி காரை பதிவு செய்ய, நுழைவு வரி செலுத்தியதற்கான ரசீதும், ஆட்சேபனை இல்லா சான்றிதழும் அவசியம். இது, அனைத்து இறக்குமதி கார்களுக்கும் பொருந்தும். ஜி.எஸ்.டி., சட்டத்திற்கு முன், மதிப்பு கூட்டு வரி அமலில் இருந்தது. அப்போது, இறக்குமதி காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டியது அவசியம். அதன்படி, நடிகர் விஜய் தன் காருக்கு, மொத்தம், 40 லட்சம் ரூபாய் நுழைவு வரி செலுத்தி உள்ளார். முதலில், 8 லட்சம் ரூபாயும், தற்போது 32 லட்சம் ரூபாயும் செலுத்தி உள்ளார்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.