சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
தனுஷ் இயக்கிய 'ப பாண்டி', நடித்த 'வேலையில்லா பட்டதாரி 2' உள்ளிட்ட படங்களுக்கும், சதுரங்க வேட்டை, முண்டாசுபட்டி, ஜோக்கர், மெஹந்தி சர்க்கஸ், ராட்சசி, தாராள பிரபு ஆகிய படங்களுக்கும் இசையமைத்தவர் ஷான் ரோல்டன். தனுஷ், ஷான் ரோல்டன் இருவரும் பரஸ்பரம் தாங்கள் நெருக்கமான நண்பர்கள் என்பதை பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள். ஷானை கூடுதலாகவே பாராட்டுவார் தனுஷ்.
இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஷான் ரோல்டன், “என்னிடமிருந்து ஒரு பெரிய அறிவிப்பு விரைவில்,” என்று டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவிற்கு தனுஷ் ரசிகர்கள் சிலர் “மீண்டும் இந்தப் பக்கம் வந்துடாத” என கமெண்ட் செய்திருந்தனர். 'வேலையில்லா பட்டதாரி 2' படத்திற்கு அவர் சரியாக இசையமைக்கவில்லை என்பதையும் அதற்கான காரணமாக சொல்லியிருந்தனர். மேலும் சிலர், 'சினிமாவை விட்டு போகப் போறியா' என்றெல்லாம் கமெண்ட் போட்டிருந்தனர். அதே சமயம் சில ரசிகர்களும் ஷான் ரோல்டனைப் பாராட்டியிருந்தனர்.
இன்று அந்த கமெண்ட்டுகளுக்குப் பதிலளிக்கும் விதத்தில், “வேலையில்லா பட்டதாரி 2' படத்தை முழுவதுமாக முடிக்க எனக்கு 3 நாட்கள் மட்டுமே நேரம் கொடுக்கப்பட்டது. எந்த தரத்திற்கும் அது ஒரு நியாமில்லாத காலக்கெடு. தனுஷ் சார் இது குறித்து ஏற்கெனவே பேசியுள்ளார். ஆனால், சில இதயமற்ற தனுஷ் ரசிகர்கள் அதைப் பற்றி இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனது அறிவிப்புக்கும், உங்களுக்கும், எந்த தொடர்பும் இல்லை,” என பதிவிட்டிருந்தார்.
பிறகு என்ன நினைத்தாரோ ஒரு மணி நேரம் கழித்து, “பல அன்பான தனுஷ் ரசிகர்கள் எனக்கு ஆதரவையும், அன்பையும் தவிர வேறு எதையும் காட்டாதவர்களாக இருக்கிறார்கள். ஆமாம், நானும் எதிர்காலத்தில் அவருடன் பல லட்சிய, தனித்துவமான படங்களில் தொடர்ந்து பணியாற்றுவேன். உங்கள் காதுகளுக்கு மகிழ்ச்சியான எனர்ஜியான இசையைத் தருவேன். சரியான நேரம் வரட்டும்,” என ஒரு மணி நேரத்திற்கு முந்தைய கோபப் பதிவிற்கு சமாதானப் பதிவிட்டுள்ளார்.
இடையில் ஒரு மணி நேரத்தில் என்ன நடந்ததோ ?.....