பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' |
எங்கேயும் எப்போதும் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் சர்வானந்த்.. ஆனால் தமிழில் இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தெலுங்கு திரையுலகில் மினிமம் கியாரண்டி ஹீரோவாக வலம் வருகிறார் சர்வானந்த். அந்தவகையில் கடந்த மார்ச் மாதம் தெலுங்கில் இவர் நடித்த 'ஸ்ரீகரம்' என்கிற படம் வெளியானது.
இந்தப்படம் வெளியான சமயத்தில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சன் நெக்ஸ்ட் ஒடிடி பிளாட்பார்மில் வெளியானபோதும் கூட வசூல் ரீதியான வரவேற்பை பெற்றதாம். ஆனாலும் தனக்கு தரப்பட வேண்டிய சம்பள பாக்கித்தொகையை மட்டும் தயாரிப்பாளர் தராமல் இழுத்தடிப்பதால் அவர்மீது சட்டரீதியாக வழக்கு தொடர்ந்திருக்கிறாராம் சர்வானந்த்.
ஸ்ரீகரம் படத்திற்காக சர்வானந்துக்கு 6 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு ரிலீசுக்கு முன்பே நான்கு கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு விட்டதாம். பட ரிலீசுக்கு பிறகு மீதி இரண்டு கோடியை தருவதாக சொன்னவர்கள் வெறும் 50 லட்சம் மட்டுமே கொடுத்துள்ளார்களாம். இதையடுத்து மீதி ஒன்றரை கோடியை தனக்கு செட்டில் செய்யுமாறு தயாரிப்பாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கையில் இறங்கியுள்ளாராம் சர்வானந்த்