பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் | பிளாஷ்பேக்: மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து, முதன்மை குழந்தை நட்சத்திரம் என்ற உச்சம் தொட்ட “பேபி சரோஜா” | பிரதீப்பின் ‛எல்ஐகே' தள்ளிவைப்பு : 'டியூட்' தயாரிப்பாளர் மீது 'எல்ஐகே' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | சிம்பு படத்தலைப்பு 'அரசன்': ஹீரோயினாக நடிப்பது சமந்தா? | மீ டு குற்றச்சாட்டுக்கு ஆளான இயக்குனர் டைரக்சனில் நடிப்பது ஏன் ? ; ரீமா கல்லிங்கல் விளக்கம் | காந்தாரா 1000 கோடி வசூலிக்கும் ; நடிகர் ஜெயராம் ஆருடம் | கார் விபத்தில் சிக்கி மயிரிழையில் தப்பிய விஜய் தேவரகொண்டா |
தற்போது தமிழில் துக்ளக் தர்பார், அரண்மனை-3, சர்தார் போன்ற படங்களில் நடித்து வரும் ராஷி கண்ணா, தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார். இதில் தில்ராஜு தயாரிப்பில் விக்ரம் குமார் இயக்கும் தேங்க்யூ குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை இத்தாலியில் நடத்தி விட்டு சமீபத்தில் தான் இந்தியா திரும்பியுள்ளனர்.
ராஷி கண்ணா கூறுகையில், ‛‛கொரோனா வைரஸ் மீண்டும் பரவிக் கொண்டிருந்த நேரம் தான் தேங்க்யூ படப்பிடிப்பிற்காக இத்தாலிக்கு புறப்பட்டு சென்றோம். முதலில் இத்தாலிக்கு செல்லவே பயந்தேன். என்றாலும் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்பதால் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாங்கள் செட்டில் இருக்கும்போது இத்தாலி அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. அதை பின்பற்றி படப்பிடிப்பு நடந்தது. சீக்கிரம் படப்பிடிப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்பதால் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வரை நடித்தோம். அப்படி நடித்து முடித்து விட்டு இந்தியா திரும்பியிருக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார் ராஷி கண்ணா.