ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
மூடர் கூடம் படத்தை இயக்கியவர் நவீன். குறைந்த முதலீட்டில் தயாரான அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு அலாவுதீனும் அற்புத கேமராவும் என்கிற படத்தை தயாரித்து, இயக்கி, நடித்தார். அந்த படத்தின் பணிகள் முடிந்தும் இன்னும் ரிலீசாகவில்லை.
தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் அக்னிச் சிறகுகள் என்ற படத்தை இயக்கி உள்ளார். மூடர் கூடம் வெளிவந்து பல ஆண்டுகள் ஆகியும் நவீன் இயக்கத்தில் அடுத்த படம் வெளிவரவில்லை. இந்த நிலையில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அவருக்கு இரண்டு படத்தை இயக்கித் தரும் வாய்ப்பை கொடுத்திருக்கிறது. இதனை அந்த நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து முடித்துள்ள காட்டேரி, பல்லு படாம பார்த்துக்கணும் உள்ளிட்ட பல படங்கள் இன்னும் வெளிவராமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.