அட்லியின் 'ராக்கா' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் ஷாருக்கான்! | சிவராஜ்குமாரை இயக்கும் எங்கேயும் எப்போதும் சரவணன் | விக்னேஷ் ராஜா நீங்கள் ஜீனியஸ் : தனுஷ் பாராட்டு | தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் ஜோவிகா! | 4வது 100 கோடியை தொடுமா எல்ஐகே | 1 கோடி இழப்பீடு கேட்டு தமன்னா தொடர்ந்த வழக்கு மீண்டும் தள்ளுபடி | 'அரசன்' பார்த்து அதிர்ச்சி அடைந்த தனுஷ் | முடிவுக்கு வரும் 'துரந்தர் 2' வசூல் | 'ஜனநாயகன்' லீக்: 3 முக்கிய குற்றவாளிகள் கைது | ஆங்கிலத்திலும் வெளியாகும் என்னுடைய முதல் படம் 'டாக்ஸிக்' தான் ; நடிகர் யஷ் |

பிரபல தமிழ் எழுத்தாளர் விக்ரமாதித்யன். திருநெல்வேலியை சேர்ந்த இவர் ஆகாசம் நீல நிறம், ஊரும் காலம், உள்வாங்கும் உலகம் உள்ளிட்ட 16 கவிதை நூல்களை எழுதி உள்ளார். எனக்கும் என் தெய்வத்துக்கும் இடையேயான வழக்கு. அவன் அவள், தன்மை முன்னிலை படர்க்கை உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
இயக்குனர் பாலா அவரை நான் கடவுள் படத்தில் நடிகராக அறிமுகப்படுத்தினார். அந்த படத்தில் அவர் பிச்சைக்காரனாக நடித்து பேசும் வசனங்கள் மிகவும் பிரபலம். அதன்பிறகும் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவரது மனைவியும் நடிகை ஆகியுள்ளார்.
எழுத்தாளர் சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன் இயக்கி உள்ள இன்ஷா அல்லாஹ் என்ற படத்தில் விக்ரமாதித்யன் மனைவியாக அவரது நிஜ மனைவி பகவதி அம்மாள் நடித்துள்ளார். இஸ்லாமிய மக்களின் வாழ்வியலை சொல்லும் இந்தப் படத்தில் எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் எழுதிய சிறுகதை ஒன்று இடம் பெறுகிறது. இந்த கதை முதிய இஸ்லாமிய தம்பதிகளின் வாழ்க்கையை பற்றியது. இந்த கதையில் விக்ரமாதித்யனும் அவரது மனைவி பகவதி அம்மாளும் கணவன், மனைவியாக நடித்துள்ளனர்.