சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'ஜகமே தந்திரம்'. இப்படம் ஓடிடி தளத்தில் ஜுன் 18ம் தேதி அன்று வெளியாகும் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தைத் தியேட்டர்களில் வெளியீடு செய்ய சிலர் முயற்சித்ததாகவும் அந்த முயற்சி தோல்வியடைந்துவிட்டது என திரையுலகில் தெரிவிக்கிறார்கள்.
தனுஷ் நடித்த 'அசுரன், கர்ணன்' இரண்டு படங்களுமே முழுமையான கமர்ஷியல் படங்கள் அல்ல. அப்படியிருந்தும் அப்படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. அப்படியிருக்க, முழு கமர்ஷியல் படமான 'ஜகமே தந்திரம்' படத்தைத் தியேட்டர்களில் வெளியிட்டால் பெரிய வசூல் கிடைக்க வாய்ப்புள்ளது என தயாரிப்பாளரிடம் பேசினார்களாம்.
ஆனால், ஓடிடி நிறுவனத்துடன் ஏற்கென பெரிய தொகைக்கு படத்தை ஒப்பந்தம் செய்துவிட்டதால் அதை மீறி படத்தைத் தியேட்டர்களில் வெளியிட முடியாது என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாம்.
ஓடிடி வெளியீடு என அறிவித்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது தியேட்டர்களும் மூடப்பட்டு இருப்பதால் இன்னும் தாமதிக்க வேண்டாம் என நேற்று அறிவிப்பை வெளியிட்டார்களாம். 'அசுரன், கர்ணன்' போல வசூலைப் பெறலாம் என முயற்சித்தவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியிருக்கிறது.




