மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் |
கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி. இவர் போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டு 3 மாதங்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளார். வழக்கு நடந்து வருகிறது. இவருடன் கைது செய்யப்பட்ட ராகிணி திரிவேதியும் தற்போது ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டபோது அவர் வீட்டில் கிடைத்த சில போட்டோக்களின் அடிப்படையில் அவருக்கு அஜீஸ் பாஷா என்பவருடன் திருமண நிச்சயதார்ததம் நடந்துள்ளதும், அவர் முஸ்லிமாக மதம் மாறிய தகவல்களும் வெளிவந்தது. அப்போது அதனை சஞ்சனாவும், அவரது தாயாரும் கடுமையாக மறுத்தனர். அது சினிமாவுக்காக எடுக்கப்பட்ட போட்டோக்கள் என்று தெரிவித்தனர்.
விடுதலைக்கு பிறகு முதன் முறையாக சஞ்சனா மனம் திறந்து பேசியுள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததையும், மதம் மாறியதையும் ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
இனி மறைப்பதற்கு ஏதுமில்லை. எனது திருமண நிச்சயதார்த்தம் கொரோனா ஊரடங்கு அமுலில் இருந்தபோது நடந்தது. அந்தக் காலகட்டத்தில் அதை கொண்டாடவோ, அதை தெரிவிக்கவோ வாய்ப்பு கிடைக்கவில்லை. திருமணத்தை ஒரு தொண்டு நிறுவனத்தில் எளிமையாக நடத்த இருக்கிறேன். நான் இப்போது ஆன்மிகத்தில் கவனம் செலுத்துகிறேன். தினமும் ஐந்து வேளை நமாஸ் செய்கிறேன். அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கிறேன். நான் இஸ்லாம் மதத்துக்கு மாறியது என் தனிப்பட்ட விருப்பம். என் முடிவை அரசியலாக்கவோ, விமர்சிக்கவோ வேண்டாம். என்று தெரிவித்துள்ளார்.