அமைச்சர் வாக்குறுதி ; வேலை நிறுத்தத்தை கைவிட்ட மலையாள திரையுலகம் | ஊர்வசியின் சகோதரர் நடிகர் கமல் ராய் காலமானார் | பிளாஷ்பேக் : இளவரசு நடிகரானது இப்படித்தான் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரை காப்பாற்றிய நடன இயக்குனர் | கோட்டயத்தில் நடந்த உண்மை சம்பவம்: தலைவர் தம்பி தலைமையில் இயக்குனர் பேட்டி | உடற்கேலி : ஈஷா ரெப்பா வருத்தம் | பாரத், சான்வீயின் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | சிரஞ்சீவி படத்தில் நடிக்க இளம் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை | இம்மார்ட்டல் படம் குறித்து பகிர்ந்த இயக்குனர் | 'கர' படத்தில் வில்லத்தனம் கலந்த தனுஷ் |

சென்னை: ஓ.டி.டி.யில் படம் வெளியிடுவதை கண்டித்து மீண்டும் தியேட்டர்களை மூடுவோம் என உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோனாவால் மூடப்பட்ட தியேட்டர்கள் தற்போது 100 சதவீத அனுமதியுடன் இயங்க தயாராகி வருகின்றன. பெரிய நடிகர்களின் புதுப்படங்கள் தியேட்டரில் வெளியாக காத்திருக்கின்றன.இந்நிலையில்மூன்று வாரங்கள் மட்டுமே தியேட்டரில் படம் திரையிடப்படுகிறது. அதற்கடுத்து ஆன்லைனில் வெளியிடுவதை தயாரிப்பாளர்கள் விரும்பத் துவங்கியுள்ளனர். மாஸ்டர் படம் வெளியாகிய 15 நாட்களுக்குள் ஆன்லைனில் வெளியிட்டனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கிடையே தெலுங்கானாவில் தியேட்டர் அதிபர்கள் புது கோரிக்கை வைத்துள்ளனர். பெரிய பட்ஜெட் படம் என்றால் தியேட்டரில் வெளியாகி ஆறு வாரத்திற்கு பின்னரே ஆன்லைனில் வெளியிட வேண்டும். குறைந்த செலவில் எடுத்த படம் என்றால் நான்கு வாரத்திற்கு பின் தான் ஆன்லைனில் வெளியிட வேண்டும். இல்லையென்றால் மார்ச் 1ம் தேதி முதல் தியேட்டர்கள் மூடப்படும் என எச்சரித்துள்ளனர்.
அதே போன்ற எதிர்ப்பு தமிழகத்திலும் எழ தொடங்கியுள்ளது. வரும் நாட்களில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் கர்ணன் மற்றும் விஷாலின் சக்ரா உள்ளிட்ட பல படங்கள் தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தியேட்டர் உரிமையாளர்கள் கூறியதாவது: சில தயாரிப்பாளர்கள் படம் வெளியாகி குறைந்த நாட்களிலேயே ஆன்லைனிலும் வெளியிட முயற்சிக்கின்றனர். வெளிநாட்டு உரிமையையும் இங்கு படங்கள் வெளியாகும் போதே தருகின்றனர். இதனால் அடுத்த நாளே இணையதளத்தில் படம் வெளியாகும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தியேட்டர் தொழில் தான் பாதிக்கும். இதை தடுக்க தயாரிப்பாளர்கள் தியேட்டர் உரிமையாளர்கள் இணைந்து நடவடிக்கை எடுப்பதே நல்லது. இல்லையென்றால் தமிழகத்திலும் தியேட்டர்கள் மூடப்படும் நிலை வரலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.