‛காந்தாரா' கண்டெடுத்த அய்ரா | பிரியதர்ஷனின் ‛ஹைவான்' ஹிந்தி படத்தில் சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் | ராமன் தேடிய சீதை, பாட்ஷா, குடும்பஸ்தன் - ஞாயிறு திரைப்படங்கள் | இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு |

காதலர்களாக வலம் வருகின்றன விக்னேஷ் - சிவன்-நயன்தாரா ஜோடி. தற்போது காதலன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. இவருடன் விஜய் சேதுபதி, சமந்தாவும் நடிக்கின்றனர். இயக்கம் மட்டுமின்றி ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்-விக்கி ஜோடி நெற்றிக்கண், கூழாங்கல் ஆகிய படங்களையும் தயாரித்து வருகின்றனர்.
இதில், கூழாங்கல் திரைப்படம் ரோட்டர் டாம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டுள்ளது. இதில் நயன்தாரா-, விக்னேஷ் சிவன் மற்றும் படக்குழுவினர் பாரம்பரிய உடையில் பங்கேற்றனர். நயன்தாரா மஞ்சள் பட்டு புடவையும், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பிறர் வேஷ்டி சட்டையும் அணிந்துள்ளனர். இந்த போட்டோக்களை சமூகவலைதளங்களில் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.