காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
ஏ1 படத்தை அடுத்து ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் பாரிஸ் ஜெயராஜ். அனைகா சோதி, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த டிசம்பர் 1-ந்தேதி வெளியான நிலையில், நேற்று டிரைலரை வெளியிட்டனர்.
எந்த கெட்ட பழக்கமும் இல்லாத கானா பாடகரான சந்தானம், திடீரென குடி பழக்கத்திற்கு அடிமையாகிறார். அதன் பின்னணியில் அவர் திருமணம் கடைசி நிமிடங்களில் நின்று போய்விடுகிறது. திருமணம் நிற்க என்ன காரணம் என்பதை படம் பேச இருக்கிறது என்பதை டிரைலரை பார்க்கும்போதே புரிந்து கொள்ள முடிகிறது. வழக்கமான சந்தானத்தின் டைமிங் காமெடிகள் இந்த டிரைலரிலும் காண முடிகிறது. படம் முழுக்க இருக்கும் என நம்பலாம். ரசிகர்களை கவர்ந்துள்ள இந்த டிரைலர் சமூகவலைதளங்களில் வைரல் ஆனது.