ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி | 'தாய்கிழவி' நல்ல லாபம்; அடுத்தடுத்து படங்களை தயாரிக்கும் சிவகார்த்திகேயன் | சூரி, ரவிக்குமார் படத்தின் கதை என்ன தெரியுமா... | என்னை வேறொரு கோணத்தில் காட்டும் படம்: ஜதின் சர்னா | பாராட்டுகளை பெற்ற 'லிட்டில் விங்க்ஸ்': உயிரோடு இல்லாத இருவர் | தேசிய விருது பெற்ற தமிழ் குறும்படம் யு-டியூப்பில் வெளியாகிறது | 'ஹபீபி' படம் சாத்தியமாக 20 ஆண்டுகள் ஆனது : மீரா கதிரவன் | பிளாஷ்பேக்: இயக்குனராக போராடிய பஞ்சு அருணாசலம் | பிளாஷ்பேக்: அவ்வையாக நடித்த ஆண் நடிகர் |

கதையின் நாயகனாக நடித்து வரும் சூரி தற்போது ‛மண்டாடி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் எக்ஸ் தளத்தில் ஒருவர், ‛‛அண்ணா உங்கள் பட சூட்டிங் எங்கள் ஊரில் நடப்பது எங்களுக்கு மகிழ்ச்சியே. இரவு நேர படப்பிடிப்பில் வேடிக்கை பார்க்க வரும் எங்கள் பகுதி மக்களிடம் உங்களது பவுசன்கர்கள் கொஞ்சம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள். தயாரிப்பு நிறுவனத்திடம் கொஞ்சம் சொல்லி வைக்கவும் நன்றிகள்'' என பதிவிட்டு இருந்தார்.
இதற்கு சூரி, ‛‛தம்பி, உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி! படப்பிடிப்பில் ஏற்பட்ட தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இதை தயாரிப்பு குழுவிடமும், பவுன்சர்ஸ் சகோதரர்களிடமும் தெரிவித்து இனி மிகுந்த கவனத்துடன் இருக்கச் சொல்கிறோம். எப்போதும் போல உங்கள் அன்பே எங்களுக்கு பலம். மீண்டும் நன்றி!'' என பதில் கொடுத்துள்ளார்.