டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

மாரி செல்வராஜ் இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையில், துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ம் தேதி வெளியான படம் 'பைசன்'. இப்படம் 55 கோடி வசூலைக் கடந்துள்ளதா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
தீபாவளிக்கு வெளியான மற்றொரு படமான 'டியூட்' 100 கோடி வசூலைக் கடந்த நிலையில் தற்போது 'பைசன்' படம் 50 கோடி வசூலைக் கடந்துள்ளது. தமிழக வியாபாரமாக 15 கோடி விற்கப்பட்ட படம் லாபத்தைக் கொடுத்துள்ளது.
இந்த வருடம் வெளியான சிறிய படங்களில் 'டூரிஸ்ட் பேமிலி, மாமன்' படங்களுக்குப் பிறகு 'பைசன்' படமும் 50 பிளஸ் கோடி வசூலில் லாபகரமான படங்கள் பட்டியலில் இணைந்துள்ளது.
இந்தப் படம் மூலம் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற இயக்குனராக மாரி செல்வராஜ், முதல் வெற்றியைப் பதிவு செய்தவராக துருவ் விக்ரம் தடம் பதித்துள்ளார்கள்.