தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு |

இயக்குனர் செல்வராகவன் சமீப காலமாக டைரக்ஷனை ஒதுக்கி வைத்து விட்டு முழு நேர நடிகராக மாறியுள்ளார். ஆனாலும் அவர் பல வருடங்களுக்கு முன்பு தனுஷை வைத்து இயக்கிய 'புதுப்பேட்டை' மற்றும் கார்த்தியை வைத்து இயக்கிய 'ஆயிரத்தில் ஒருவன்' ஆகிய இரண்டு படங்களுக்கும் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று ரசிகர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். தனக்கும் அப்படி ஒரு எண்ணம் இருப்பதாகவும் கூறி வந்தார் செல்வராகவன்.
ஆனால் இன்னும் அதற்கான எழுத்து வடிவம் முழுமை பெறவில்லை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ள செல்வராகவன், இந்தப் படங்களின் இரண்டாம் பாகத்தில் தனுஷ் மற்றும் கார்த்தி நடிப்பார்களா என்கிற கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “கிட்டதட்ட 3 வருடங்களுக்கு தனுஷ் மற்றும் கார்த்தி ஆகியோரின் கால்ஷீட் கிடைக்காது. இன்னும் இந்த படங்களின் கதையையும் நான் முழுமையாக முடிக்கவில்லை. அதே சமயம் இந்த படங்களின் இறுதிக்காட்சிகளில் நான் மற்ற நடிகர்களை வைத்து முடித்திருப்பதால் தனுஷ், கார்த்தி இல்லாமலேயே இந்த படங்களின் இரண்டாம் பாகத்தை என்னால் எடுக்க முடியும்” என்றும் கூறியுள்ளார்.