ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

1950களில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் பல படங்கள் தயாரானது. அதே நேரத்தில் பெங்காலி மொழி திரைப்படங்கள் பல ரீமேக் செய்யப்பட்டது. பெங்காலி நாடகங்கள் தமிழ் சினிமா ஆனது. முதன் முறையாக தமிழ் மற்றும் பெங்காலியில் தயாரான 'ரத்னதீபம்', பெங்காலி டைட்டில் 'ரத்னதீப்'.
தீபகி போஸ் என்ற பெங்கலாலி இயக்குனர் இயக்கி, தயாரித்தார். அபி பட்டாச்சார்யா, அனுபமா, சன்யல், சாயாதேவி நடித்தனர். ரூபின் சட்டர்ஜி இசை அமைத்திருந்தனர்.
ஒரு பெரிய கோடீஸ்வர வீட்டின் வாரிசு திடீரென காணாமல் போகிறான். இதை தெரிந்து கொள்ளும் ஒருவன் தான்தான் காணாமல்போன வாரிசு என்று அந்த குடும்பத்திற்குள் நுழைகிறான். ஒரு கட்டத்தில் அவர்கள் காட்டும் அன்பில் திளைக்கும் அவன் உண்மையை சொல்லிவிடுகிறான். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இதேபோன்ற கதை பின்னாளில் நிறைய படங்களில் வந்தது. படம் இரண்டு மொழிகளிலும் வெற்றி பெற்றது.




