பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

இந்தியத் திரையுலகத்தில் உள்ள கதாநாயகர்களில் அசத்தலான நடனமாடும் நடிகர்களில் ஒருவர் தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன். ஆரம்ப காலம் முதலே அவரது ஸ்டைலான நடனத்தால் பல மொழி ரசிகர்களையும் ஈர்த்தவர். அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் தற்போது நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன்.
இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் ஆரம்பமாகி நடந்து வருகிறது. இந்த மாதத்தில் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. அந்தப் பாடலுக்கான நடனத்தை ஜப்பான் நடன இயக்குனரான ஹொகுடோ கொனிஷி அமைத்துள்ளார்.
இது குறித்து இன்ஸ்டாவில், “ரகசியம் இப்போது ஒன்று வெளியாகிவிட்டது. இந்திய திரைப்படத் துறையில் கடந்த மாதம் நான் வேலை செய்தது குறித்து பதிவு செய்ய விரும்பினேன். இந்திய திரைப்பட உலகம் குறித்து நான் எப்போதும் மிகுந்த ஆர்வமாக இருந்தேன். எனவே இது நிச்சயமாக ஆழமான முழுக்கில் நேரடியாக குதித்தது போன்ற சிறந்த அனுபவம். துரதிர்ஷ்டவசமாக, இதுபற்றி இன்னும் அதிகம் பேச முடியாது. அதில் நிறைய மணி நேரங்கள் மற்றும் கடின உழைப்பு செலுத்தப்பட்டுள்ளது என்பது மட்டுமே பிரம்மாண்டமான ஒன்றாக இருக்கும். வெவ்வேறு கலாச்சாரங்கள் குதித்து அறிந்து கொள்வதற்கும் ஆவலாய் உள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.




