உதவி செய்பவர்களை காயப்படுத்தாதீர்கள்: 'துள்ளுவதோ இளமை' அபிநய் | 'டீசல்' படப்பிடிப்பில் ஹரிஷ் கல்யாணை அதிர வைத்த மீனவர் | கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியாகும் நிவின்பாலியின் 'சர்வம் மாயா' | உங்க பட ரிலீஸ் தேதியை மாற்ற முடியுமா லாலேட்டா ? ; ரிலீஸ் தேதியை அறிவிக்க நடிகரின் புதிய யுக்தி | 'மூக்குத்தி அம்மன் 2' படப்பிடிப்பை நிறைவு செய்த கன்னட நடிகர் துனியா விஜய் | ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' |
விக்ரம் நடித்த தில் படத்தில் மிரட்டலான வில்லனாக அறிமுகமானவர் நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி. இவர் அறிமுகமானது ஹிந்தியில் தான் என்றாலும் அதன் பிறகு தென்னிந்திய மொழிகளில் மிகவும் தேடப்படும் வில்லன் நடிகராக மாறினார். அப்படி இவர் ஹிந்தியில் நடித்த துரோகால் என்கிற படத்திற்காக 1995ல் சிறந்த துணை நடிகர் என்கிற தேசிய விருது பெற்றார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தேசிய விருது பெற்ற சமயத்தில் நடைபெற்ற ஒரு சுவாரசியமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார் ஆசிஷ் வித்யார்த்தி.
இது குறித்து அவர் கூறும்போது, “துரோகால் படத்திற்கு எனக்கு தேசிய விருது கிடைத்தது. அந்த படத்தில் இயக்குனர் கோவிந்த் நிகாலனி என்னை அழைத்து ஒரு மிகப்பெரிய ஹோட்டலின் பெயரை சொல்லி அங்கே திரை உலகைச் சேர்ந்த முக்கிய பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுக்க ஏற்பாடு செய் என்று கூறினார். அந்த ஹோட்டலை அதுவரை நான் வெளியிலிருந்து தான் பார்த்திருக்கிறேனே தவிர உள்ளே சென்றதும் இல்லை. அங்கே சாப்பிட்டதும் இல்லை.
ஒரு வழியாக அங்கே பார்ட்டிக்கான ஏற்பாடுகளை செய்து விட்டேன். ஆனால் பார்ட்டியில் எங்கே செலவாகி விடுமோ என்று ஒரு கிளாஸ் ஓட்கா குடிப்பதற்கு கூட தயங்கிக் கொண்டு ஒரு கிளாஸ் லெமன் கலந்த தண்ணீரை மட்டும் கையில் வைத்துக்கொண்டு நின்றேன். காரணம் இந்த பார்ட்டி முடிந்ததும் கட்ட வேண்டிய பில் தொகைக்கான பணம் என்னிடம் இல்லை. அந்த டென்ஷன் வேறு மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.
ஒரு கட்டத்தில் இயக்குனர் கோவிந்த் நிகலானியை தனியே அழைத்து, சார் ஒருவேளை இந்த பார்ட்டிக்கான பணத்தை என்னால் கட்ட முடியாமல் போனால் என்ன நடக்கும் ? இங்கே ஹோட்டலில் உள்ள பாத்திரங்களை கழுவ சொல்வார்களா ? இல்லை போலீஸ் வருமா என்று கேட்டேன். என் நிலையை புரிந்து கொண்ட இயக்குனர், இந்த பார்ட்டிக்காக செலவை தானே செலுத்தி விடுவதாக கூறியதும் தான் அதுவரை என்னிடம் இருந்த டென்ஷன் மறைந்தது. நானும் மற்றவர்களுடன் அந்த பார்ட்டியில் ஜாலியாக பங்கேற்றேன்” என்று கூறியுள்ளார்.