ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சென்னை: போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.
போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில், கடந்த 23ல் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு, கடந்த 26ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் இதே வழக்கில் கைது செய்யப்பட்டார். இருவரும் ஜாமின் கோரி, சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து அவர்கள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், இருவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வழக்கின் புலன் விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராக வேண்டும். ரூ.10 ஆயிரத்துக்கான சொந்த ஜாமினும், ரூ.10 ஆயிரத்துக்கான இரு நபர் ஜாமினிலும் இருவரையும் ஜாமினில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.