சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

விஜய் ஆண்டனி நடித்த 'மார்கன்' படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் சுசீந்திரன், யூ டியூப்பில் ரிவ்யூ சொல்பவர்களையும் கடுமையாக விமர்சித்தார். அவர் பேசுகையில், ''சமீபத்தில் வெளியான 'டி.என்.ஏ, மார்கன்' படங்களுக்கு ஆரம்பத்தில் நல்ல ரிவ்யூ வரவில்லை. ஆனால் நான் தியேட்டரில் சென்று பார்த்தபோது படம் நன்றாக இருந்தது. சில நாட்களில் படம் பிக்அப் ஆனது. இப்போது சில யூடியூப்பர்கள் தங்கள் வியூஸ், விளம்பர வருமானத்துக்காக தவறான ரிவ்யூ கொடுக்கிறார்கள். சினிமாவில் இருந்து கொண்டே சினிமாவை கொலை செய்கிறார்கள்.
இப்போது ஏகப்பட்ட டீம் வந்துவிட்டது. ஒரு டீம், சார் படத்துக்கு நாமே டிக்கெட் எடுத்து கொடுத்து 100 பேரை அனுப்புவோம். அவங்க வெளியே வரும் போது படம் ஆஹா ஓஹோ என்பார்கள் என ஐடியா கொடுக்கிறார்கள்.. மற்றொரு டீம், தங்களுக்கு வேண்டியதை வாங்கி கொண்டு, தங்களுக்கு வேண்டியவர்களை தியேட்டருக்கு அனுப்பிவிட்டு படத்தை பற்றி தவறாக சொல்ல சொல்கிறார்கள்'' என்றார்.
இப்போது யூ டியூப் விமர்சகர்கள் மீது தமிழ் சினிமாவில் கடும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. விமர்சனம் செய்ய கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் வழக்கு தொடுத்தது. ஆனால் கோர்ட் அந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டது. இதனால் போலியாக ஒரு படத்தை பற்றி ஆஹா ஓஹோ என சொல்லவோ, மட்டம் தட்டி பேசுவது போன்றோ விமர்சனம் செய்வோரை தடுக்க முடியாது, கட்டுப்படுத்தலாம் என சிலர் யோசனை தெரிவிக்கின்றனர்.