'ஹேப்பி ராஜ்' படப்பிடிப்பு நிறைவு | 'ஜனநாயகன்' தணிக்கை தாதமம், காரணம் என்ன ? | பிளாஷ்பேக்: மூன்று நட்சத்திரங்களின் திரைப் பிரவேசத்திற்கு வித்திட்ட “பட்டினப்பிரவேசம்” | மீண்டும் படம் இயக்க உள்ளேன்: பாக்யராஜ் பேட்டி | பராசக்தி பட சஸ்பென்ஸ் எது? | பிளாஷ்பேக் : ஜல்லிக்கட்டுக்கு சம்பந்தமில்லாத ஜல்லிக்கட்டு படம் | பிளாஷ்பேக்: முதல் 'ஜல்லிக்கட்டு' படம் | சண்டை காட்சியில் எஸ்.ஜே.சூர்யா படுகாயம் : கில்லர் படப்பிடிப்பு நிறுத்தம் | 'ஜனநாயகன்' பட்ஜெட் 500 கோடி: நீதிமன்றத்தில் தகவல் | விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் |

இசையமைப்பாளர் இளையராஜா முதலில் இசையமைத்த 'அன்னக்கிளி' படம், மே 14, 1976ல் வெளியானது. அந்தவகையில் சினிமாவில் 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் இளையராஜா. இதுவரை ஆயிரத்து 400க்கும் அதிகமான படங்களில் பல ஆயிரம் பாடல்களுக்கு இசையமைத்து விட்டார்.
ஆயிரக்கணக்கான மேடை கச்சேரிகளை பார்த்துவிட்டார். 5 தேசியவிருது, ஏகப்பட்ட மாநில, மற்ற விருதுகள், பத்ம விபூஷண் விருது வரை வாங்கிவிட்டார். 81 வயதிலும் கச்சேரிகள், சிம்போனி என பிஸியாக இருக்கிறார். ராஜ்யசபா எம்.பி.,யாகவும் இருக்கிறார். இதற்கெல்லாம் மணிமகுடமாக இந்த 50வது ஆண்டில் அவருக்கு பாரதரத்னா கிடைக்க வேண்டும், வாழும் காலத்திலேயே அவர் கவுரவிக்கப்பட வேண்டும் என்பதே அவருடைய ரசிகர்களின் ஆர்வமாக இருக்கிறது.
இளையராஜாவுக்கு பாரதரத்னா விருது கொடுக்க ஏற்பாடுகள் நடப்பதாக சில மாதங்களாக தகவல்கள் கசிகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ராஜாஜி, சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன், சி.வி.ராமன், காமராஜர், அப்துல்கலாம், எம்ஜிஆர், எம்.எஸ் சுப்புலட்சுமி, சி.சுப்ரமணியம் ஆகியோர் இந்தியாவின் உயர்ந்த விருதான பாரதரத்னா விருது பெற்றவர்கள்.