நடிகர் சங்க புதுகட்டடம் : விஜயகாந்த் பெயர் சூட்டப்படுமா | தள்ளிப் போகிறதா துல்கர் சல்மானின் 'காந்தா' ? | சிறிய படங்களுடன் விநாயக சதுர்த்தி ரிலீஸ் | ரஜினியின் அடுத்த பட இயக்குனர் யார் ? | 15 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் பிஜூ மேனன் | 'பிக் பாஸ்' ஹிந்தி, சீசன் 19 ஆரம்பம் | அண்ணன் அண்ணன் தான் : விஜய் குறித்து சிவகார்த்திகேயன் | ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! |
இயக்குநர் ஏ ஆர் முருகதாஸிடம் சர்கார் மற்றும் தர்பார் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு விஜய் இப்போது ஜெய் ஹீரோவாக நடிக்கும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்க, முக்கிய வேடங்களில் யோகிபாபு, கருடா ராம் ஆகியோர் நடிக்கின்றனர். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் துவக்க விழா சென்னையில் நடந்தது. முக்கிய சமூக பிரச்னை ஒன்றை காதலும், திரில்லரும் கலந்து, கமர்ஷியல் அம்சங்களுடன் இப்படம் உருவாகிறது. பிரபஞ்சம் அடுத்தடுத்து ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம், ஒருவன் வாழ்வில் அடுத்தடுத்து ஏற்படும் ஆச்சரிய மாற்றங்கள், அதிர்வுகள் தான் இக்கதையின் மையம். நம் நாட்டில் நிகழ்கின்ற, தொடர்ந்து நிகழப்போகிற ஒரு பெரும் ஆபத்தினை பற்றி, இப்படம் பேசவுள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.