மடோனா, இவ்வளவு அழகாகப் பாடுவாரா ? | திருமணம் எப்போது? அதர்வா நச் பதில் | அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் : பிஸியாகும் நேரு ஸ்டேடியம் | கதை தயாராகாமல் அறிவிக்கப்பட்டதா விக்ரம் 64 ? | சென்ற வருடம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்', இந்த வருடம் 'லோகா' | சமூக ஊடகத்தில் கமெண்ட் என்ற பெயரில் மனநோயாளிகள் தாக்குகிறார்கள் : தங்கர்பச்சான் | '96' பிரேம்குமார் இயக்கத்தில் பஹத் பாசில் | ஜப்பானில் வெளியான 'வேட்டையன்' | கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? |
சமீபத்தில் வெளியான 'பயர்' படத்தில் பாலியல் குற்றவாளி காசியாக நடித்த பாலாஜி முருகதாஸ் நாயகனாக நடிக்கும் படம் 'ரன்னர்'. விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகிவரும் இப்படத்தில் பாலாஜி ஓட்டப்பந்தய வீரராக நடிக்கிறார். சிதம்பரம் ஏ.அன்பழகன் இயக்குகிறார். ரைனோஸ் ராம்பேஜ் பிலிம்ஸ் சார்பில் காலெப் மற்றும் கெல்வின் தயாரிக்கின்றனர். இதற்கு முன்பு இத்தயாரிப்பு நிறுவனம் 'பாக்சர்' மற்றும் 'கொட்டேஷன் கேங்க்' படங்களை தயாரித்திருந்தது. துரை ராஜேஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார், தர்ஷன் ரவி குமார் இசை அமைக்கிறார்.
இயக்குநர் சிதம்பரம் அன்பழகன் இப்படம் குறித்து கூறியதாவது: உலக அளவில் உள்ள பல்வேறு ஸ்பிரிண்டர்களின் (வேக ஓட்ட வீரர்கள்) உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகிறது. நாயகன் பாலாஜி முருகதாஸ் இத்திரைப்படத்துக்காக கடந்த 6 மாதங்களாக சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பயிற்சியாளர்களிடமிருந்து தீவிரமாக வேக ஓட்டப் பயிற்சி பெற்று வருகிறார். அவரது பொறுப்பும், கடின உழைப்பும் திரையில் கண்டிப்பாக பிரதிபலிக்கும், என்றார்.